பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

317


திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார் 317

அறனல்ல செய்யார் . பிறன்பொருளைக் கவர்தலும் பிறவுமான

அறனல்லாத செயல்களைச் செய்யமாட்டார்.

பிற அறனல்லாத செயல்கள் கவர்தலும், அஃது இயலாவிடத்து, அடித்துத் துன்புறுத்திப் பறித்தலும், அதுவும் இயலாவிடத்துக் கொலை முதலியன செய்தலுமான செயல்கள். 2 மற்றின்பம் வேண்டுபவர் பெருமை தரும் நிலையான இன்பத்தை

விரும்புபவர்கள். - -

காலத்தாலும் பயனாலும் பெருமை உணர்த்தப் பெற்றது. சிறுமைக்கு எதிரானதால் பெருமை ஆயிற்று. - பேரின்பம் என்று கருதப்பெறும். வீட்டின்பத்திற்கும் பெருமையே முதல் ஆனதால், மற்றின்பத்தை மணக்குடவரும், பரிதியாரும் வீட்டின்பம் என்று கொண்டனர். இதுபொருள் பொருத்தமும் இயங்கியல் இயல்பும் அல்லாத கற்பனையாம்.

- வேண்டுபவர் - விரும்புபவர்.

- பிறர் பொருளைக் கவர்தலால் பெறும் பயனின்பம், பழியையும் குற்றத்தையும் தண்டத்தையும் வருவித்தலால், சிறுமையும், நிலையற்றதும் ஆகும். . - அவ்வாறின்றித் தன் முயற்சியாலும் உழைப்பாலும் வரும் இன்பம்

பெருமைக்குரியதும் நிலையுள்ளதும் ஆகும். எனவே, அறனல்லவற்றைச் செய்து சிற்றின்பத்தையும் நிலையற்றதையும் பெறுவதைவிட அற முயற்சியாலும் நேரிய உழைப்பாலும் வருவதும் பெருமைக்கும் நிலைப்புக்கும் உரியதுமான பொருளைப் பெறுவதே சிறப்பு என்று அறிவுறுத்தினார் என்க. . 3. இது, முன்னைக் குறளில் கூறப்பெற்ற, படுபயன் என்பதற்கும், பழிபடுவ’ என்பதற்கும் விளக்கம் கூறுதலால், அதனையடுத்து வைக்கப் பெற்றது.

கஎச. இலம்என்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற - -

புன்மையில் காட்சி யவர். .. - 174

பொருள்கோள் முறை :

புலம் வென்ற புன்மையில் காட்சியவர் இலம் என்று வெஃகுதல் செய்யார்.