பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

322 - அ-2-14 வெஃகாமை 18

- இனி, ஒவ்வொரு துறையிலும் ஆழமாகவும் அகலமாகவும் கற்ற அறிவு

எனப் பொருள்படும்.

என்னாம் - என்ன பயனுக்கு ஆம்?

- ஒருவன் கற்பதும் அறிவு பெறுவதும் வாழ்க்கையில் பயன்

பெறுவதற்கேயாம்.

- பயன் பெறுதல், பதவிபெறுதல், பொருளீட்டல், அவற்றால் வசதி

வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ளுதல்.

- இனி, அறிவு பெற்ற ஒருவன் அதனால், தன்முயற்சியுடன் தன்

வாழ்க்கைக்குரிய பயன்களைப் பெறுதல் வேண்டும்.

- அவ்வாறல்லாமல், கற்ற கல்வியையும் அதனால் பெற்ற அறிவையும் தன் கையில் வைத்துக் கொண்டு, அவற்றால் பொருளையோ, வேறு பயன்களையோ பெற்றுக் கொள்ள முயற்சி செய்யாமல் வாளா இருப்பதும், எளிதே பிறன் பொருளைக் கவர நினைப்பதும், அறிவிருந்தும் அறியாமையில் இருக்கும் நிலைகளாகும். .

அதன் பொருட்டாகவே அவ்வறிவு என்ன பயனுக்கு ஆகும்? அஃதாவது, வாழ்க்கை, பொருள் ஆகிய இவற்றை உருவாக்கிக் கொள்ளப் பயன்படுத்தப்பெற வேண்டிய அறிவை, அவ்வகை முயற்சிகளில் அவன் ஈடுபடுத்தாவிடில், வேறு என்ன பயனுக்காக அவன் அவ்வறிவை அவ்வளவு ஆழமாகவும் அகலமாகவும் பெற்றான்

&Toff isory. > -

- ஒருவன் தன்முயற்சிக்காகவே காரணமாகிய அறிவைப் பெறுவது? இனி, அதைப் பெற்ற பின், அவன் அம்முயற்சிகளைச் செய்து பயன்பெறாவிடில், அவ் வறிவை வேறு எதற்காகத்தான் பெற்றான் என்று அவன் இழிவையும் அழிவையும் சுட்டிக்காட்டுவார், என்க.

- இனி, இவ்விடத்து நாம் இன்னொரு தடையையும் எண்ணிப் பார்த்தல் வேண்டும். அஃதாவது, இவ்வளவில் கற்றவன், இன்னொருவன் பொருளைக் கவர நினைப்பானோ என்பது, .

இஃது அறிவியலுக்குப் பொருந்துவதன்று எனினும் உலகியலுக்கு மிகப் பொருந்துவதாம் என்க. என்னை? பெரும்பாலும் மிகுதியும் கற்றவனே உலகியலில், பெருங் கள்ளனாகவும், கொடியனாகவும், ஒழுங்கைக் கடைப்பிடியாதவனாகவும், அறவுணர்வற்றவ னாகவும் இருத்தலைக் காணலாகும். இதனைக் களவென்னும் காரறிவாண்மை (287 என்றார், ஆசிரியரும்.

ஆனால், அறிவியல்படியும் இது நிகழ்வதே என்னை? மிகக் கற்றவன்