பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

323


திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார் 323

ஒருவன் தான் கற்ற அளவுக்கு ஒரு பயனளவை எதிர்பார்த்து, அது கிடையாவிடத்தும், தன்னளவிற் குறைவுறக் கற்றவன், தன்னினும் மிகு நலமாயும் வளமாயும் இருத்தலைக் கண்டவிடத்தும், அவன்மேற் பொறாமை கொள்ளுதலும், அவன் பொருளை வெஃகுதலும் கூடுவனவேயோம் என்க. - 2. யார்மாட்டும் வெஃகி வெறிய செயின் - (அவன்) பிறன் பொருளைக் கவர விரும்பி, யாவரிடத்தும் அறிவில்லாத செயல்களைச் செய்வானாயின்,

யார்மாட்டும் யாவரிடத்தும்.

அஃதாவது ஆழமாகவும் அகலமாகவும் கற்று அறிவு பெற்றவனாகிய இவன், அவ்வாறு கல்லாதவரிடத்தும், அல்லது அதுபோலவே கற்றாரிடத்தும், ஏழையரிடத்தும், அல்லது செல்வரிடத்தும், பெண்டிரிடத்தும் சிறுவரிடத்தும் என்றவாறு, வெஃகி - அவர்தம் பொருளை, ஈட்டத்தைக் கவர்ந்து கொள்ள விரும்பி. வெறிய செயின் - வெறுமையான செயல்களை அஃதாவது அறிவற்ற

செயல்களைச் செய்வானாயின். வெறிய வெள்ளிய - வெறுமையான அறிவற்ற. - இனி, வெறியுணர்வுச் செயல்களை என்னினும் ஆம் வெற்றுணர்வுச் செயல்கள் அல்லது அறிவற்ற செயல்கள் அல்லது

வெறியுணர்வுச் செயல்களாவன, - . பிறன் தனக்காகத் திரட்டிய பொருளைக் கவர நினைத்தல். அவன்

உரிமைக்கும் உடைமைக்கும் ஊறு செய்ய நினைத்தல்; - அவன் அதைப் பெறுதற்குப் பல வன்மங்களையும் சூழ்ச்சிகளையும்

கையாளுதல்; - அம் முயற்சிகளால் பயன்பெறாவிடில், அவனைக் கொல்லுதல் முதலியன. . . . - இவ்வாறான செயல்களின்றிப் பிறன்பொருளைக் கவர எண்ணுதலும்

தீது என்பார்.

உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக் கள்ளத்தால் கள்வேம் எனல் - 282 3. புலன்கள் வழித்தாய உள்ளத்தாசையால் மட்டுமன்றிக் கற்றவழிப் பெற்ற அறிவாலும் பிறன் பொருளைக் கவர நினைக்கும் குற்றத்தை இது கூறலால், அதன்பின் இதனை அமைத்தார், என்க.