பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

325


திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார் 325

கடைப்பிடித்து ஒழுகல் இயலாது என்பதை, நூலாசிரியர்,

“தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்

அருளாதான் செய்யும் அறம்’ . - 249 என்பார். இதனையே சான்றோர் பலரும் வலியுறுத்துவர்.

அருளொடு புணர்ந்த அகற்சி - தொல்:1022:22 ‘அருள்முந் துறுத்த அன்புபொதி கிளவி - தொல்:1107:1 ‘பிறர்க்கென முயலும் பேரருள் நெஞ்சம்’ - நற்.:186:8 ‘அருள்குடை யாக அறம்கோல் ஆக’ அருளும் அன்பும் அறனும் மூன்றும்’ - Ufl:5:80 ‘அருளுறச் செயின்நுமக்கு அறனுமார் அதுவே’ . கலி:140:34

-

‘அருள்வல்லான் ஆக்கம்போல் அணிபெறும்’ கலி:38:16 அருள்தீர்ந்த காட்சியான் அறம்நோக்கான் நயஞ்செய்யான் - கலி:120:1 ‘அல்லது கெடுப்பவன் அருள்கொண்ட முகம்போல - கலி:148:1

‘அறம்செய்து அருளுடையார் ஆகுமின் - நாலடி:7:3 ‘அருளின் அறமுரைக்கும் அன்புடையார் வாய்ச்சொல் பொருளாகக் கொள்வர் புலவர்’ - நாலடி:321:1-2 அருளில் பிறக்கும் அறநெறி’ - நான்மணிக்:5:3 ‘அற்றாக நோக்கி அறத்திற்கு அருளுடைமை முற்றாக அறிந்தார் முதலறிந்தார். - பழமொழி:14:1-2 அறம்செய்து அருளுடையார் ஆதல் - பழமொழி:215.2 ‘அறனும் அருளுடையான் கண்ணதே ஆகும்’ - சிறுபஞ்ச1:2 ‘நெகிழ்ந்த அருளினான் ஆகும்.அறம் - சிறுபஞ்ச:33:4

- மேலும், நூலாசிரியர் அருளை அடையவே அன்பு செய்வார்; அவ் வருளையும் அன்பையும் கைக் கொண்டுதான் பொருள் முயற்சியும் செய்வார் என்று விளக்குவார்.

அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்

புல்லார் புரள விடல்’ - 755 அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப் பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல் - 285.

பிறரும் அதையே எடுத்து மொழிதலும் காண்க ‘இருள்படு நெஞ்சத்து இடும்பை தீர்க்கும்