பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

327


திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார் 327

என்றும், கெடுதல் - இரண்டறமும் சேர இழத்தல். சூழ்ந்த துணையானே கெடும் என்றும்,

- காலிங்கர், அது காரணமாகப் பொல்லாதனவற்றை நினைப்பக் கெடுவர்’

என்றும், -

- பாவாணர், அதைக் கைப்பற்றத் தீயவழிகளை ஆராய்ந்தெண்ணிய

மட்டிற் கெட்டுவிடுவான்’ என்றும், . - வேறு சிலர், பிறர் பொருளை விரும்பித் தீயவழிகளைப் பற்ற எண்ணுவானாயின், அவன் கெட்டு ஒழிவான் என்றும், பிறர் பொருளை விரும்பித் தீய வழிகளை எண்ணினால், (எண்ணிய அளவில்) கெட்டுப் போவான் என்றும், - - பலவாறாக, எண்ணியவுடனேயே கெட்டுவிடுவான் என்பது போல, செயல் உடன்மை புலப்படுத்திப் பொருள் கூறுவர். இஃது அறிவியலுக்கும் உலக இயங்கியலுக்கும் ஏற்றதன்று. - - இக் கெடுதல் நிகழ்வும் படிப்படியேதான் நிகழுமேயன்றி, உடனடியாக ஒருபோதும் எவ்விடத்தும் நிகழாது என்பதையும், அப்படி நிகழும் என்று குறிப்பிடுவது இயற்கைக்கு மாறானது என்பதையும் அறிவினார் உணர்ந்து கொள்ளுதல் வேண்டும். - 3. முந்தைய குறளில் கற்ற அறிவுடையார் பிறன்பொருளை வெஃகுதல் பற்றிக் கூறியவர். இதில் அருளறம் கடைப்பிடிப்பார் பிறன்பொருளை வெஃகுதல் பற்றிக் குறிப்பிடுதலால், அதன் பின் இதனை வைத்தார்.

களன. வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்

மாண்டற்கு அரிதாம் பயன். - 177

பொருள்கோள் முறை : ..

வெஃகிஆம் ஆக்கம் விளைவயின் பயன் மாண்டற்கு அரிதாம் வேண்டற்க. பொழிப்புரை : பிறன் பொருளைக் கவாதலால் வரும் செல்வம் விளைவு

தருங்கால், அதன் பயன்பெருமையோடு துய்த்தும் ஈந்தும் மகிழ்தற்கு இயலாது; ஆகலின் அதை விரும்பாது விடுக்க

சில விளக்கக் குறிப்புகள் :

1. Q ஆக்கம் - பிறன்பொருளைக் கவர்தலால் வரும் செல்வம்.