பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

329


திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார் 329

- என்பார் ஆகலின்.

4. வேண்டற்க ஆகலின் அதை விரும்பாது விடுக.

- பிறனிடமிருந்து கவர்ந்து கொள்ளப்பெற்ற செல்வம், தன் முயற்சியால் வந்ததன்று; பெருமை இல்லாமல் வந்தது; செப்பமில்லாதவர்கண் வந்தது; பண்பிலானிடம் வந்தது; ஆகலின் அதைப் பிறர்க்குப் பெருமையுடன் ஈதலும் இயலாது தாமே துய்த்தலும் இயலாது. எனவே அதனை விரும்ப வேண்டா என்றார், என்க. - -

5. முன்கூறிய ஆறு குறட்கருத்துகளுக்கும் இயைபாக, அவ்வாறு பிறனிடமிருந்து கவரப்பெற்ற செல்வம், என்ன நோக்கத்திற்காகக் கவரப் பெற்றதோ, அந்நோக்கத்திற்கும் உதவாது ஆகையால், அதனை விரும்பற்க என்று முடிவு கூறினார்; எனவே அவற்றின் பின் இதை வைத்தார்.

கனஅ. அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை

வேண்டும் பிறன்கைப் பொருள். - 178

பொருள்கோள் முறை :

செல்வத்திற்கு அஃகாமை யாதெனின் பிறன்கைப் பொருள் வெஃகாமை வேண்டும்.

பொழிப்புரை ஏற்கனவே தான்கொண்ட செல்வம் குறையாமல் இருக்க வழி யாதெனின், பிறனுக்கு உரிய உடைமைப் பொருளைத் தான் கவராமல் இருப்பதே ஆகும்.

சில விளக்கக் குறிப்புகள் : . - 1. இதில் உள்ள வெஃகாமை வேண்டும் பிறன் கைப்பொருள் என்பதனை, முன்னை உரையாசிரியர் பலரும், பிறன்வேண்டும் கைப்பொருள் வெஃகாமை என்று கொண்டு கூட்டுவர். இதில் அவ்வாறல்லாது பிறன்கைப்பொருள் வெஃகாமை வேண்டும் என்று கூட்டிப் பொழிப்பு உரைக்கப்பெற்றது என்க. அதன் உண்மை விளக்கத்தாற் புலப்படும். - 2. செல்வத்திற்கு அஃகாமையாதெனில் ஏற்கனவே தான்கொண்ட செல்வம்

குறையாமல் இருக்க வழி யாதெனின், செல்வத்திற்கு - ஏற்கனவே தான் கொண்டிருக்கும் செல்வத்திற்கு, அஃகாமை யாதெனில் குறையாமை யாதெனில்,