பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

330 அ-2-14 வெஃகாமை 18

- அஃதாவது, ஏற்கனவே தான் வைத்திருக்கும் செல்வமும் குறையாமல்

இருக்க வழி யாதெனில்,

3. பிறன்கைப் பொருள் வெஃகாமை வேண்டும் பிறனுக்குரிய உடைமைப்

பொருளைத் தான் கவராமல் இருப்பதே ஆகும்.

இதற்குப் பிறன்வேண்டும் கைப்பொருள் வெஃகாமை என்றே அனைத்து உரையாசிரியர்களும் கொண்டு கூட்டிப், பிறன் வேண்டும் கைப்பொருளைத் தான் வேண்டாமையாம் என்று பொருள் தருவர்.

- இது தேவையற்றது. வேண்டும் என்னும் சொல்லை, வெஃகாமை என்பதுடன் சேர்த்து, வெஃகாமை வேண்டும் என்று கொள்வதே மிகச் சிறந்த பொருள் வலிவைத் தருகிறது.

- மற்று, பிறன்கைப் பொருள் என்னும் சொற்றொடரே, பிறனுக்குத் தேவையான உரிமை உடைமைப் பொருள் என்று பொருள்பட்டு விடுவதால் வேண்டும்’ எனும் தேவைச் சொல் அங்கு வேண்டாததாகிவிடுகிறது என்பதை அறிவினார் ஒர்ந்து கொள்க.

- மேலும், வெஃகாமை வேண்டும் என்பதற்கும், விரும்பாமை வேண்டும்’ என்றே பலர் பொதுப் பொருள் தந்துள்ளதும் நிறைவற்றதே. ஒருவன் பிறன்கைப் பொருளை விரும்பின அளவிலேயே, அவன் ஏற்கனவே கொண்டுள்ள செல்வம் குறைந்து போய்விடும் என்று கொள்வது, உலகியல் பொருத்தமும், அறிவியல் பொருத்தமும் அற்றது என்க. - இதற்கு, ஒருவன், பிறன் கைப்பொருளைத் தான் விரும்பிக் கவர்ந்து கொண்ட பின்னர், புதிதாக வரும் அக் கவர்பொருளை, ஏற்கனவே தன்னிடம் உள்ள பொருளுடன் அவன் கொண்டு வந்து சேர்க்கவும், பின்னர் அவன் களவுநிலை வெளிப்பட்டுக் கவரப்பட்ட அப்பொருளைக் குற்றப் பொருளாகக் கொண்டு, ஆட்சி அதிகாரிகள் அதனைக் கைப்பற்றும்பொழுது, அவன் முன்னரே தன் ஈட்டத்தால் சேர்த்து வைத்திருந்த சிறு செல்வப் பொருள்களும் அதனுடன் சேர்ந்து பறிக்கப்பட்டு, அவன் செல்வம் குறைந்துபடுமே தவிர, அது மற்றுத் தானாகக் குறைந்து ப்ோக இயங்கியலில் வாய்ப்பில்லை என்று பொருள் கொள்வதுதான் உலகியல் பொருத்தம் உடையதும், அறிவியல் பொருத்தம் உடையதுமாம் என்று உய்த்துணர்ந்து கொள்க. - இது தொடர்பாக, நூலாசிரியர், அழக்கொண்ட எல்லாம் அழப்போம்

1659) என்று கூறுவதும் இணைத்து எண்ணத்தக்கதாம் என்க. 4. முன்னைய குறளில், கவர்ந்து கொள்ளப்பட்ட பொருள்ை ஒருவன்

பெருமையுடன் துய்க்கவும் பிறனுக்குக் கொடுக்கவும் இயலாது. என்றவர். இதில், அவ்வாறு கவர்ந்து கொள்ளப்பெற்றப் பொருள்