பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

333


திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார் 333

கஅ0, இறல்ானும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்

வேண்டாமை என்னும் செருக்கு. – $80

பொருள்கோள் முறை :

எண்ணாது வெஃகின் இறல்ானும் வேண்டாமை என்னும் செருக்கு விறல் ஈனும்.

பொழிப்புரை தனக்கு வந்துசேரும் கேடுகளைப் பற்றிச் சிறிதும் சிந்தியாமல், பிறன்பொருளைத் தான் கவர விரும்பின், அஃது அவனுக்கு இறுதி அழிவைத் தரும். பிறன் பொருள் தனக்குத் தேவையில்லை என்னும் பெருமிதம் அவனுக்கு அனைத்து வெற்றியையும் தரும்.

சில விளக்கக் குறிப்புகள் :

1. எண்ணாது வெஃகின் இறல் ஈனும் - தனக்கு வந்து சேரும் கேடுகளைப் பற்றிச் சிறிதும் சிந்தியாமல், பிறன்பொருளைத் தான் கவர விரும்பின், அஃது அவனுக்கு இறுதி அழிவைத் தரும்.

எண்ணாது - தனக்கு வந்து சேரும் கேடுகளைப் பற்றிச் சிறிதும்

சிந்தியாமல்.

எண்ணிப் பார்ப்பது சிந்தித்துப் பார்ப்பது.

- இன்னின்ன வழியில் இன்னின்ன கேடுகள் வரும், இன்னின்ன வழியில் இன்னின்ன நன்மைகள் வரும் என்று, எதிர்கால விளைவுகளைச் சிந்தித்துச் செயல்படுவதே அறிவுடைமை ஆகும். என்னை?

‘எதிராகக் காக்கும் அறிவினார்க் கில்லை

அதிர வருவதோர் நோய்’ - – 429 ‘யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன் - 341 நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த தன்மையான் ஆளப் படும்’ . - 5 #1

- என்பார், ஆகலின், இறல் ஈனும் இறுதி அழிவை உருவாக்கித் தரும் ஈனும் என்றது

உருவாக்கித் தருதலை - 2. வேண்டாமை என்னும் செருக்கு விறல்ஈனும் . பிறன்பொருள் தனக்குத் தேவையில்லை என்னும் பெருமிதம் ஒருவனுக்கு அனைத்து வெற்றியையும் தரும். -