பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மாசற்றார். என்பதை ஒரே இணைச்சொல்லாகக் கொண்டு, அவர்கள் குற்றமற்றவர் அஃதாவது மனத்தகத்துக் குற்றமில்லாத பெரியோர்கள் அல்லது சிறந்தவர்கள் என்று அதற்குப் பொருள் கூறியுள்ளனர்.

- இவ்வாறு பொருள் கொள்வதில் சில தடைகள் உள்ளன. ஒன்று, மாசற்றவர் அஃதாவது குற்றமற்றவர் நட்பை ஏன் தவிர்த்தல் வேண்டா என்று கூறாமல், மறத்தல் வேண்டா என்று கூறுகிறார். மாசற்றவராக இருப்பின் அவர் தொடர்பைத் தவிர்த்தல் வேண்டா என்பதுதானே சரி அவ்வாறு கூறாது மறத்தல் வேண்டா என்று கூறுவானேன்?

- அவ்வாறு கொள்வதானால், மாசற்றார் என்னும் சொல்லில் ஏதோ சிறப்புப் பொருள் இருத்தல் வேண்டும் என்பது.

- இதில், மாசற்றார் என்பதில், மாசு + அற்றார் என்னும் இரு சொற்களையும் இணைத்து ஒரே சொல்லாகக் கருதிப் பொருள் கொண்டால், குற்றமற்றவர் என்றே பொருள் வரும்.

அற்ற - அறு என்னும் வினையடியாகப் பிறந்த இறந்தகாலப் பெயரெச்சம்,

அற்ற - அறச் செய்த, நீங்கச் செய்த

அற்றார் - அறுத்தவர், அறச் செய்தவர்.

அற்றார் - இல்லாதவர் பொருளற்றவர், ஏழை இஃது ஒரு பொருள்.

அறு - அற்றல் அற்றார் - அறச் செய்தவர் நீக்கியவர். இஃது இன்னொரு பொருள்.

மாசு அற்றார் . மாசு நீக்கியவர் - மாசில்லாதவர்.

-மாசு நீக்கியவர் தன்னளவில் மாசு நீங்கியவர். (இது முதற் பொருள்)

-மாசு நீக்கியவர் (பிறரளவில்) இஃது இரண்டாவது பொருள்)

அவ்வாறானால், அதை மறத்தல் வேண்டா என்று சொல்வதில் சிறப்பில்லை. இன்னும் சொன்னால், அது சரியன்று போல் தோன்றும் அதனால் தவிர்த்தல் வேண்டா அல்லது துறத்தல் வேண்டா என்றே கூறியிருத்தல் வேண்டும். ஆனால் நூலாசிரியர் அவ்வாறு கூறவில்லை. மறத்தல் வேண்டா என்றே கூறியுள்ளார். அப்படி அவர் கூறியிருப்பதற்கு ஏதோ ஒரு காரணம் இருத்தல் வேண்டும். அஃதென்ன காரணமாக இருக்கும் என்பதை முதற்கண் நாம் சிந்தித்தல் வேண்டும்.

- அதற்குரிய காரணம் வேறு எங்கும் இருத்தல் முடியாது; சொல்லளவில் வருவித்தலும் இயலாது. எனவே அக்காரணம் மாசற்றார்,கேண்மை என்னும் இரு சொற்களிலுந்தான் பொதிந்திருத்தல் வேண்டும் என்னும் முடிவுக்கே வரவேண்டியுள்ளது.