பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

அ-2-7 செய்ந்நன்றி அறிதல் - 11

சொற்களுக்கும் இங்குக் கொண்ட பொருளைக் கூறமுடியாது என்க. பிற விளக்கங்களை அவ்விடத்துக் காண்போம். *: ,

துன்பத்தில் துப்பாயார் நட்பு துறவற்க - தமக்கு ஒரு துன்பம் நேர்ந்த

பொழுதில், ஆதரவு தந்து, அதை நீக்கித் தம்மையும் தம் குடும்பத்தையும் காத்தவரை விட்டு நீங்குதலும் வேண்டா. துப்பு - உதவி, ஆதரவு, துணை. முன் பகுதியில் மறக்கக் கூடாத கேண்மையைக் கூறியவர், இத் தொடரில் துறக்கக் கூடாத நட்பைக் கூறுகிறார்.

இதில், நட்பு என்னும் சொல் நேரிடையாகவே கையாளப் பெற்றது. - துறவு - முனிதல், வெறுத்தல், விடுதல், விட்டு நீங்குதல் என்னும் பொருள்கள் உள.

- ஒன்றை வெறுத்தால்தான் அதனைவிட்டு நீங்குதல் இயலும், - எனவே துறவற்க என்னும் சொல்லுக்கு வெறுத்தலும், விட்டு விடுதலும் கூடா என்னும் பொருள்களே பொருந்துவனவாம்.

- துன்பத்தில் ஆதரவாக இருந்து பேணிக் காத்த நண்பரை எந்தக் காரணத்தாலும் வெறுத்தல் வேண்டா விட்டு விலகுதலும் வேண்டா

என்று இருவகையிலும் அறிவுறுத்துவதாக இத்தொடர் பொருள் தரும்.

- இதில் ஒரு நுட்பம் கருதற்பாலது. முன்னரே அவர் துன்பத்திற்குத் துணையாக இருந்துள்ளார். அவரை வெறுக்க வேண்டிய அல்லது

விட்டுவிலக வேண்டிய தேவை ஏன் ஏற்பட்டது . எவ்வாறு ஏற்படும்

- என்று நோக்குதல் வேண்டும். ; : - - .

ஒருவேளை, தம்மிடம் மீண்டும் அவர் துன்பத்திற்குத் துணை கேட்பார் என்று அவராகவே விலகி நிற்க விரும்பலாம் அல்லது, அவர் ஏதோ ஒரு வகையில் நாம் விரும்பாத வகையில் அல்லது

வெறுக்கத் தகுந்த வகையில் ஒன்றைச் செய்திருக்கலாம். அந்த

நிலையில்தான், அவர் நம்மை விட்டு விலகியிருக்க விரும்பினாலும் நாம் அவரை வெறுக்கவோ விட்டு விலகவோ, அவரை இழக்கவோ

வேண்டா என்று அறிவுறுத்துகின்றார். இதுதான் செய்ந்நன்றி

அறிதலாகிய உணர்வு நன்மனப் பண்பு.

- ஒருவேளை அவர் விரும்பத்தகாதொன்றை அல்லது வெறுக்கத்

தக்கதொன்றைத் தமக்குச் செய்யினும் அவரைத் துறக்க வேண்டா

என்கிறார்.

இதனை அடுத்துவரும் கொன்றன்ன இன்னா செயினும் என்னும் (0) குறளில் மேலும் வலியுறுத்துவர்.

இனி, அவரைத் துறக்காமல் இருக்கச் செய்யும் அறிவுரை, அவரிடமிருந்து மேலும் நன்மை பெறுகின்ற நோக்த்திலென்றால், அது