பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 அ-2-7 செய்ந்நன்றி அறிதல் - 11

என்றார் இலக்கண நூலார் என்க. 5. இனி, இவை யிவ்வாறாக, இக் குறட்பாவிற்கு உரை தருவதில் பலரும் பல வகையாக வேறுபடுதலையும் மாறுபடுதலையும் ஓரளவு காணலாம். . மணக்குடவர், தனக்குத் துன்பம் வந்த காலத்து வலியாயினார் நட்பை விடாதொழிக’ என்று முன்னுரை பின்னுரையாகவும், பின்னுரை முன்னுரையாகவும் காரணமின்றி, நூலாசிரியர் நிரல் முறையை மாற்றிக் கூறினார். - -

- பரிதியார், குறளில் கூறப்பெறும் நிரல் முறையை மாற்றிக் கூறாமல், நன்றி என்றும் விடக்கடவனல்லன், நல்லோர் சிநேகமும் என்றென்றும் விடக்கடவனல்லன்; துன்பம் வந்த போது, பலமாயினார் நட்பினை விடக்கடவனல்லன் என்றே கூறினார். -

காலிங்கரோ, மனக்குவடவர் போல் முன் பின்னாகக் கூறாமல், இயல்பாகவே பொருள் கூறினும், இங்குச் சொன்ன இருவகைப்பட்ட நன்றியையும் மறவாதவர் இம்மையின்கண் இன்பமும் மறுமையின்கண் இன்பமும் பெறுவர் என்று இங்குக் கூறப்பெறாத இம்மை மறுமைக் கருத்தினையும் உடன்வைத்துக் கூறினார். இது தேவையற்றது.

இனிப் பரிமேலழகரோ, காலிங்கர் கூறியதை யொப்பவே, நிரல் முறையை முன்பின்னாகக் கூறியும், இம்மை மறுமைப் பயன்களுடன் இணைத்துக் கூறியும் சென்றார். இவ்வாறு கூறுவது, அவரது வேதமதப் பார்வையை வலியுறுத்தவே என்க.

திருக்குறள் கருத்துகளில், முதலில் எங்காவது தம் மதத்தைப் புகுத்த வாய்ப்புளதா என்று பார்ப்பதும், அவ்வாறு வாய்ப்புள்ள இடங்களில், ஒரு சிறு சந்தையும் மிகப் பெரிய தொளையாக்கிக் கொண்டு, ஆரியவியல் கருத்துகளைத் திணித்து வைப்பதும் அவற்றால் என்றென்றும் தமிழரை நிலையான ஆரிய மத இந்து மத அடிமைகளாக்கி வைப்பதுமே அவர் கோட்பாடு என்க.

இவ் வகையில், வியப்பென்ன வென்றால், இந்நூலுக்குத் ‘தமிழ் மரபுரை எழுதிய பாவாணரும், மணக்குடவரும் பரிதியாரும் விழிப்போடு இம்மை, மறுமைக் கருத்துகளைத் தொடாமலிருந்ததைக் கண்டும் காணாதவர் போல், அவர்களைப் பின்பற்றாது, காலிங்கரையும், பரிமேலழகரையுமே பின்பற்றி மறுமை வரை விடாமல் சென்றதுதான். - - - .ே இதில், நன்றியறிதலில், ஒரு புது உத்தி காட்டியது புலப்பட்டது. அத்துட்ன், உதவி என்பது, பொருளளவானும், செயலளவானும் மட்டும் நில்லாது, மனத்தளவானும் அறிவளவானும், ஒருவருடைய குற்றங்களையும், முறைகேடுகளையும் கண்டித்துத் திருத்தி அவரை