பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 அ-2-7 செய்ந்நன்றி அறிதல் - 11 பொருள்களைத் தரும் விழுtதல் என்னும் வேர்ப்பொருள் அடியாகப் பிறப்பது.

மிகு துன்பத்தை உணர்த்தும் விழுமம் என்னும் சொல், இந்நூலுள்

இத்துடன் நான்கு இடங்களுள் கையாளப் பெறுகின்றன.

,[

வியா விழுமம் - விழாத நீங்காத) துன்பம் - (284) உய்யா விழுமம் - உய்ந்துவர முடியாத துன்பம் (313) எற்றா விழுமம் - எற்ற (மேலேற) முடியாத துன்பம் (603)

என்று அடைகொடுத்து, அத்துன்பத்தின் ஆழத்தையும் அகலத்தையும் புலப்படுத்தக் கூறப்பெற்றுள்ளது.

விழுமம் என்றாலே விழுத்திய துன்பம் என்று பொருள்படுவதால், அதனின்று எழமுடியாமல் அழுந்தி உழன்று கிடந்தது என்பது வருவிக்கப் பெற்றது. -

துடைத்தவர் அறவே நீக்கி அல்லது போக்கி உய்யும்படி செய்தவர். - துன்ப மிகுதியால் மீட்பு முயற்சியும் மிகுதியாக உணர்த்தத் துடைத்தல் என்னும் சொல் பயன்பட்டது. 4. எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் - தாம் மட்டுமின்றித் தம்வழி எழுகின்ற

ஏழு தலைமுறையினரும் நன்றியுணர்வுடன் நினைத்திருப்பர்.

- அதிகாரப் பொருளால் நன்றியுணர்வு வருவிக்கப் பெற்றது.

ஏழேழு தலைமுறை, ஏழேழு பிறவி - என்பன உலகியல் வழக்கு - எழுபிறப்பு - என்னும் சொல்லுக்குரிய விரிவான பொருள் 62ஆம் குறளின் பொருள் விளக்கத்துள் கூறப்பெற்றது. அதனை ஆண்டுக் காண்க. - -

உள்ளுவர் நினைப்பர் உள்ளம் என்னும் பொருள் அடிப்படையில் பிறந்த சொல். . . . . . - 5. இத்தொடர் பரிமேலழகருக்கு அவருடைய வேதமத இன்றைய இந்துமதக் கொள்கையைப் புகுத்துவதற்கு வாய்ப்பாக அமைந்து விட்டது. வெறும் வாயை மெல்பவர்க்கு அவல் கிடைத்தது போல், எழுமை எழுபிறப்பும் என்னும் இரு சொற்களும் அவர்க்கு வெறும் அவலாக மட்டும் இல்லாமல் வெல்லத்தோடு இணைந்த அவலாகிவிட்டது. எனவே அவர் பிறவிக் கொள்கையைக் கற்காரை (concrete) போல் இறுக்கிக் காட்டுகிறார். அவர் இந்த அடிக்கு, எழுமையினுடைய தம் எழுவகைப் பிறப்பினும் நினைப்பர் நல்லோர் என்று உரை கூறிவிட்டு, எழுமை என்ற்து, வினைப்பயன் தொடரும் ஏழு பிறப்பினை என்றும், துன்பம் துடைத்தலான் அவர்மாட்டு