பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

அ-2-7 செய்ந்நன்றி அறிதல் - 11

பெருமைப்படலாம்; அல்லது அத்தகையவர் தம்பால் அன்புகொண்டு உதவுதல் குறித்து வியப்படையலாம்; ஆனால் சிலர் அவரால் தமக்கு உதவுகின்ற அளவில் பொருள் மிகுதியும் செயற் சாய்காலும் உள்ளனவே, அவை தமக்கு இல்லையே என்று மனத்தளவில் பொறாமைப் படலாம்; அல்லது மனத்திரிவு (விகார நினைவு) கொள்ளலாம். இவை நாளடைவில் தம் மனத்தில் படிப்படியாய் வளர்ந்து பெரியவாகி அவர்மேல் தாம் பகை கொள்ளும்படியோ, அவரைப் பொருட்படுத்தாமல் புறக்கணிப்புச் (அலட்சியம்) செய்யும்படியோ நினைவுகளை உருவாக்கலாம்.

- அல்லது, அவர் செய்த உதவியால் தாமும் முயன்று பொருளானும் செயலானும் முன்னிருந்த நிலையினும் மேம்பாடடையலாம். அக்கால், அவர் நல்ல தன்மைகள் பற்றி, ஏதாவது காரணம் கற்பித்துக் கொண்டு எள்ளலாம்; இகழலாம்; புறக்கணிப்பாக இருக்கலாம்.

மேற்கொன்ன இவ் விரு நிலைகளானும் அவர் முன்னர்க் காலத்தானும் இடத்தானும் தமக்குச் செய்த உதவி, இற்றை நிலையில், சிறியதாகவும், பெருமையில்லாததாகவும் கருதப்படலாம்.

- இவ்வாறான மனவுணர்வுகளை ஒருவர் செய்த உதவியை மறக்கச் செய்கின்றன.

- ஆனால், அவ்வுதவியின் அன்றைய தகவு நோக்கி, அதனை மறவாமல் அவரை நன்றியறிதலுடன் நினைவு கூர்ந்திருத்தல் வேண்டும் என்று வலியுறுத்துகின்றார். அது நன்மை பயப்பது என்று அறிவுறுத்தவும் செய்கின்றார். - -

- அவர் கூறிய நன்மை என்பது யாது?

தமக்கு உதவி செய்தவர், அவ்வுதவியால் மேலும் பலவகையாலும்

முயன்று தம் பொருள் நிலையிலும், செயல் நிலையிலும் முன்னேறி

வருகிறார் என்று தெரிந்து மகிழ்ந்து, அவர் மேன்மேலும் நன்கு ஈடேற மீண்டும் அவர்க்கு உதவி செய்யக் காத்திருப்பார். இந்த நிலையில்,

உதவி பெற்றவர் தம்மை மதிக்காமல் புறக்கணிக்கிறார் என்று

தெரியவந்தால், அவர் தாம் மேலும் அவர்க்கு உதவிசெய்யும் எண்ணத்தை மாற்றிக் கொள்ளலாம் அல்லது தவிர்க்கலாம். இந்நிலை உதவி செய்யப் பெற்றவர்க்கு இழப்பாகும். - . .

அடுத்து, உதவி பெற்றவர் ஒர் அருளாளர் செய்த உதவியால், தம் நிலைகளில் மேம்பட்டு முன்னேறி வருகின்றார் என்னும் செய்தியைக் கேட்க நேர்ந்த அல்லது அறிய வந்த உதவிபெற்றவரின் நண்பர்களுள்

சிலரும், அவரின், உழைப்பையும் விடா முயற்சியையும் கண்டு,

உவகையுற்றுத் தாங்களும் அவர்க்கு ஏதேனும் ஒருவகையால் உதவுதற்கு