பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

45


திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார் 45

விருப்பம் கொண்டவர்களாகவும் இருக்கலாம். இந்நிலையில் அவர்க்கு முதலில் உதவியரை அவர் நன்றி நினைக்கவில்லை என்றும், அவரை இவர் மதிப்பதில்லை என்றும் தெரியவந்தால், அவர்களும் தாங்கள் அவர்க்கு மேலும் உதவுகின்ற எண்ணத்தை மாற்றிக் கொள்ளவோ, இத்தகைய நன்றியில்லாதவரிடம் தாங்களும் தொடர்பு கொள்வதைத் தவிர்க்கவோ செய்யலாம். .

இஃது, அவ் வுதவி பெற்றவர்க்கு மேலும் ஏற்படும் இரண்டாம் நிலை இழப்பாகும். .

ஆக, செய்த உதவியை நன்றி தினையாதவர் தமக்கு நன்மையில்லாத, மாறாகத் தீமை ஏற்படுத்திக் கொள்கிற நிலைகளால், நன்றி மறப்பது நன்மை தருவதன்று என்று ஆசான் அறிவுறுத்துவார், என்க. .

- நல் + து - நன்று நன்மை.

செய்த நன்றை நினைப்பது நன்றி. - இனி, நன்றி என்னும் சொல் இருபொருளும் தரும் 3. நன்றல்லது அன்றே மறப்பது நன்று தமக்கு உதவி செய்தவரோ அல்லது பிறரோ ஏதேனும் ஒரு சூழலிலோ, அல்லது அறியாமையாலோ நன்றல்லாத ஒரு செயலைத் (கவனிக்கவும்.தீமையான செயலை அன்று) தமக்குச் செய்யினும், அவர் முன்னர் உதவி செய்தவராக இருந்தால், அவ் வுதவியை நினைந்தோ, இதுவரை ஏதும் உதவி செய்யாதவராக இருந்தால், அவர் என்றாவது ஒரு நாள் தமக்கு, ஏதோ ஒரு வகையில் உதவக் கூடும் என்று நினைந்தோ, தாம் அவர்கள் செய்த நன்மையல்லாத செயலை ஏதோ ஒரு வகைக் காரணம் பற்றி அவர்கள் அவ்வாறு நடந்திருக்கக் கூடும் என்று பெருமனத்துடன் கருதி, அதனைப் பொருட்படுத்தாமல் இருப்பதுடன் அதனை நினைவிற் கொள்ளாமல் உடனே மறந்து விடவும் வேண்டும், அதுதான் நல்லது என்பார்.

மறப்பது மறதி - மறு என்னும் வேரடியாகப் பிறந்த சொல்.

மனம் நினைவில் கொள்ள மறுப்பது.

தீமை - கெடுதல். - - --> கெடுதல் வேறு நன்மையல்லாதது வேறு. எதிர்ப்பது, கெடுதல் செய்வது தீமை. சார்பாக இல்லாதது - புறக்கணிப்பாக இருந்து நல்லது செய்வதற்குப்

பகரமாகப் பொருந்தாத ஒன்றைச் செய்வது நன்றல்லது. - .... - - --