பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 அ-2-7 செய்ந்நன்றி அறிதல் - 1

ஒருகால் நிகழ்ந்த விடத்துக்கூட, அவர் செய்த நன்றியை நினைக்கும் உயர் உள்ளத்தைப் பெறுதல் வேண்டும் என்பது ஆசிரியர் கருத்தாம்,

s@r,

‘இன்னா செயினும் விடற்பாலர் அல்லாரைப் பொன்னன்னாய் போற்றிக் கொளல்வேண்டும்’

- நாலடி : 225 ‘இன்னா செயினும் விடுதற் கரியாரைத் துன்னாத் துறத்தற் குறுவதோ ? நாலடி : 226

‘இன்னா செயினும் . பழிகானார் சான்றோர்’

- நாலடி : 227 நல்லார் எனத்தாம் நனிவிரும்பிக் கொண்டாரை அல்லார் எனினும் அடக்கிக் கொளல்வேண்டும். நெல்லுக்கு) உமியுண்டு; நீர்க்கு நுரையுண்டு புல்லிதழ் பூவிற்கும் உண்டு. - நாலடி : 221

நண்பொன்றித் தம்மாலே நாட்டப்பட் டார்களைக் கண்கண்ட குற்றம் உளவெனினும் காய்ந்தியார். - பழமொழி : 16

ஒருநன்றி செய்தவர்க்(கு) ஒன்றி எழுந்த பிழைநூறும் சான்றோர் பொறுப்பர் கயவர்க்(கு) ஒருநூறு நன்றிசெய்து) ஒன்றுதி தாகில் ஒருநூறும் திதாய் விடும்! - - - நாலடி : 357

‘ஒன்றுதவி செய்யினுமவ் வுதவி மறவாமல் பின்றையவர் செய்பிழை பொறுத்திடுவோர் பெரியோர் .

. . - வில்லிபாரதம்.

- என்றார் பிறரும். 4. அவர் செய்த ஒன்று நன்று உள்ளக் கெடும் - அவர் முன்னர் ஓர் இக்கட்டான நேரத்தில் ஒர் உதவி செய்திருந்தாலும், அதனை நினைக்கும் பொழுது, அவர் பின்னர்ச் செய்த கெடுமையும் அதனால் கொண்ட மனவெழுச்சியும் இல்லாமற் போகும் என்றவாறு

- ஒன்று என்பது எண்ணிக்கையும் அளவையும் ஒருங்கே குறித்தது. உதவி ஒருமுறையே, சிறிதளவே செய்திருந்தாலும் என்றவாறு, உள்ளுதல் ஆழ எண்ணுதல் திரும்பத் திரும்ப எண்ணுதலுமாம் . நினைத்தல் - மேலாக எண்ணுதல். so