பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

49


திருக்குறள் மெய்ப்பொருளுரை பெருஞ்சித்திரனார் 49

- கெடுதல் என்பது இருபொருள் ஒருசொல்.

ஒன்று இல்லாமற் போதல், -

இன்னொன்று தீமை.

- இவ்வாறு முன்னர் உதவியவர், இத்தீமையை மணமறிந்து செய்திரார். ஏதோ ஒரு சூழலால் அவ்வாறு நேர்ந்திருக்கும் என்று எண்ணிப் பார்ப்பின் அவர்மேல் கொண்ட வெறுப்புண்ர்வு இல்லாமற் போகும் என்றது. இவ்வாறு தீமை விட்டு நன்மை எண்ணுவது உயர்ந்த மனப்பாங்கே என்க. இதுவும் நன்றியறிதலே.

5. இது, நன்மையல்லாததைப் பொறுத்தலினும், தீமையைப் பொறுத்தலின்

மேம்பாடு கூறிற்று. ஆதலின் அடுத்து வந்தது.

கக0. எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை

செய்ந்நன்றி கொன்ற மகற்கு. -

பொருள்கோள் முறை:

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வு உண்டாம் செய்ந்நன்றி கொன்றமகற்கு உய்வில்லை.

பொழிப்புரை பிறர்க்கு நன்மையானவற்றை அழித்தல் செய்தார்க்கும், (அக்குற்றங்களினின்று தம்மை மறைத்துக் கொண்டு, வேறுபிற முயற்சிகளால்) தாம் மேம்பாடுற வாய்ப்புகளுண்டு. ஆனால், தமக்கு ஒருவர் செய்த உதவியை நினைவழிப்பார்க்குத் தம் வாழ்வில் உய்வதற்கு வழியமைவதில்லை.

சில விளக்கக் குறிப்புகள் :

செய்ந்நன்றி நினையாது மறத்தலால் நேரும் கேடு குறித்தது, இக் குறட்பா, 2. எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் - பிறர்க்கு நன்மையான எதை அழித்தல் செய்தார்க்கும், அக்குற்றங்களினின்று விடுவித்துக் கொண்டு, வேறு பிற முயற்சிகளால், தம்மை உய்வித்துக் கொள்ள வாய்ப்புகளுண்டு நன்றி கொல்லுதல் நன்மையானதை அழித்தல்

- ‘எந்நன்றி கொன்றார்க்கும் என்றது. எவ்வகையான நல்லதை அழித்தார்க்கும் எனற்கு உம்மை, சிற்றப்பும்மை, நன்றியை அறம் எனல் பொருந்தாது. அது நன்மை, மணக்குடவரும், காலிங்கரும் நன்மை யென்றே கொண்டனர்.பரிமேலழகரே அதைச் சிறப்பித்து அறம் அதுவும் பெரிய அறங்கள் என்று, பின்னர்த் தம் கருத்தைப் புகுத்துதற்கு வழிவைத்துக் கூறுவார்.