பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

51


திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார் 51

- அவ்வாறு, ஒருவன் பிறர்க்கு நன்மையாம் தன்மைகளை அழித்து விட்டு, அக் குற்றங்களையும் மறைத்துவிட்டு, வேறு பிற பொருள் முயற்சிகளைச் செய்து தன்னை மேலேற்றிக் கொள்வதும் உலகியலில் இயல்வதாக

- இதையே ஆசிரியர் எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டு என்கிறார் என்க.

- இனி, எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் என்னும் தொடருக்குப் பரிமேலழகர் மிகவும் வலக்காரமாகப் பெரிய அறங்களைச் சிதைத்தார்க்கும் பாவத்தின் நீங்கும் வாயில் உண்டாம் என்று பொருள் கூறிப்,

- “பெரிய அறங்களைச் சிதைத்தலாவது, ஆன்முலை அறுத்தலும், மகளிர் கருவினைச் சிதைத்தலும், குரவர்த் தபுதலும் முதலிய பாதகங்களைச் செய்தல் (புறம் - 3து. இதனால், செய்ந்நன்றி கோறலின் கொடுமை கூறப்பட்டது.” - என்று விளக்கமும் தருகிறார்.

அவர் எடுத்துக் காட்டும் புறநானூற்றின் 34வது செய்யுள் கீழ்வருமாறு கூறுகிறது. - - “ஆன்முலை அறுத்த அறணி லோர்க்கும் மாணிழை மகளிர் கருச்சிதைத் தோர்க்கும் குரவர்த் தப்பிய கொடுமை யோர்க்கும் வழுவாய் மருங்கில் கழுவாயும் உளவென நிலம்புடை பெயர்வ தாயினும் ஒருவன் செய்தி கொன்றோர்க்கு உய்தி இல்லென அறம்பா டிற்றே ஆயிழை கணவ” என்பது அவர் காட்டிய செய்யுள் பகுதி

- இதன் பொருள், “ஆண் (பசுமாட்டின் பால்தரும் மடியை (முலையை அறுத்த அறவுணர்வு இல்லாதவர்க்கும், தாலி யணிந்த மகளிரின் கருவைச் சிதைத்தவர்க்கும், பெற்றோர்க்குக் கொடுமை செய்தவர்க்கும், அவ் வறக்கொடுமைகளினின்று தப்பிப் பிழைக்கக் கழுவாயும் வழியும் உளவெனவும், நிலம் தன் நிலையினின்று பெயர்ந்து இயங்குவதாயினும் செய்த நன்றியைக் கொன்றவர்க்குத் தப்பிப் பிழைக்க வழியே இல்லையென, அறநூல் பாடியது, ஆயிழை கணவ!” என்பது. - இதில், முதற் பிழை என்னெனில், நன்றி என்ற சொல்லுக்கு ‘அறம் என்று பொருள் கொண்டது. அவ்வாறு கொண்டதால் ஏற்பட்ட இரண்டாவது பிழை, அவ்வறத்தைக் கொல்வது என்பதற்கு மூன்று எடுத்துக்காட்டுகளைக் கூறியது.