பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

53


திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார் 53

மட்டுமே அறுத்திருக்க இயலாது. எனவே அ ஃதொரு கற்பிதக் கொடுமையே. -

- இனி, அதில் இரண்டாவதாகக் குறிப்பிடப்பெறும் அறக் கொடுமை பெண்கள் அளவில் அன்றும் நிகழ்ந்திருக்கலாம்; இண்றும் அது நிகழ்வது கண்கூடாகவும் உள்ளது. இஃது ஒருவேளை கொடுமையாகக் கருதப் பெற்றாலும் அஃதொரு கரிசு (பாவம் என்றாலும், இதற்குக் கழுவாய் என்னவாக இருக்கலாம் என்பது விளங்கக் கூடவில்லை. இன்றைய நிலையில் இச்செயல் கரிசு (பாவம்) என்று கருதப்பெறுவதும் இல்லை. தேவையானதே என்றும் கூறப்பெறுகிறது.

இனி, அதில் மூன்றாவதாகக் கூறப்பெற்ற பெற்றோர்க்குக் கொடுமை செய்தல் என்னும் செயல், முறைகேடு, பண்பற்ற செயல் என்று கருதப் பெறுமே தவிர, அஃதொரு கரிசு (பாவம்) என்று கருதப் பெறுவதில்லை. - -

- இனி, இச்செய்யுளடியைப் பிற்காலத்து அந்நூலைப் பதிப்பித்த உ.வே. சாமிநாதர் என்னும் பார்ப்பனப் புலவர், அவ்வடியையே குரவர்த் தப்பிய கொடியோர் என்பதற்குப் பார்ப்பார் தப்பிய கொடியோர் என்று பாடம் மாற்றிப் பதிப்பித்துள்ளதும் இங்குக் கருதத் தக்கது. இதுவும் ஒருவகைக் கரவான செயலே. - - எஃது எவ்வாறிருந்தாலும் இவ்வறக் கேடுகளுக்கெல்லாம் கழுவாய் உண்டு என்பது, அறத்திற்கே மாசு கற்பிக்கும் கருத்தாகும்.

பெரும்பாலும் கழுவாய் (பாவத்தைக் கழுவிக் கொள்ளும் வழி) என்பது, தமிழியல் அறநூல்களுள் கூறப் பெறுவதில்லை. தவறு தவறுதான்; குற்றம் குற்றந்தான்; அறக்கேடு அறக்கேடுதான்; அதற்குத் தண்டனைதான் தீர்வு என்பதே தமிழியல் அறம் என்று அறியப் பெறுகிறது. திருக்குறளிலும் அத்தகைய அறக்கேடுகளோ, அவ்வறக் கேடுகளுக்கான கழுவாயோ, உய்தி பெறும் வழியோ எங்கும் கூறப்பெறவில்லை.

மற்று, ஆரிய தர்ம நூல்களுள் வேண்டுமாயின் கழுவாய் கூறப்பெற்றுள்ளது. அதனை வலியுறுத்தி ஆரியக் கோட்பாடுகளுக்கு உயர்வு கற்பிக்கவே பரிமேலழகர் இம் மயக்கமான பொருளையும் நேர்மாறான எடுத்துக்காட்டுகளையும் தந்தர்ராகக் கருதவேண்டியுள்ளது. - - இனிப் பாவாணரும் பரிமேலழகரையே தழுவிப் பொருள்

கொண்டதால் அவருரை விளக்கத்தும் தெளிவில்லை, என்க.

இனி, இக்கருத்துக்கு அரண்சேர்க்கும் எடுத்துக்காட்டுப் பாடல் புறநானூறு எனும் தமிழ் இலக்கியத்துள் வந்ததும் ஆரியக் கோட்பாடுகளை ஏற்றமாகக் கருதியே யல்லாது தமிழியல் அறத்தை நிலைநாட்டுவதற்கு அன்று என்றும் கருதவேண்டியுள்ளது என்க.