பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

55


திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார் 55

‘தன்னெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்னெஞ்சே தன்னைச் சுடும்’ - 293 என வருமிடத்தும் கூறுதலை உற்றறிக மனவியல் மதவியலன்று: இயற்கையியல் - இயல்பியல். இதுவே இறையியலுமாகும். என்னை? பிற நன்றி கொல்லுதல் புறத்தது ஆகலின், அதனை மனச்சான்று மறந்து விடும். எனவே அவன் மனத்தாக்கமின்றி, அறிவு முயற்சியில் உயர்வு தோன்ற வாய்ப்புண்டு. இதனை ‘எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் என்னும், ஐயவுணர்வுக் கருத்தான் வெளிப்படுத்தி, ‘ஒருவேளை அவனுக்கு உய்வு உண்டானாலும் உண்டாகும்; ஆனால் இவனுக்கு உய்வு உண்டாகாது’ என்று தெளிவுக் கருத்தான் உறுதிப்படுத்துவதாலும் உணர்க.

- மற்றபடி, அவனுக்கு உய்வுண்டு, இவனுக்கு உய்வில்லை என்று, அறத்தெய்வத்தால் நிகழும் நிகழ்ச்சிகள் போலக் காட்டுவதற்கு அறிவியலில் வாய்ப்பில்லை என்க. 4. இதனால், செய்ந்நன்றி கொல்லுதலின் தீமையை இறுதியாகவும்,

உறுதியாகவும், அறுதியாகவும் உரைத்தது பெற்றாம்.