பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

57


திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார் 57

இதனை, ‘காய்தல் உவத்தல் அகற்றி ஒருபொருட்கண் ஆய்தல் அறிவுடையார் கண்ணதே - காய்வதன்கண் உற்ற குணம் தோன்றா தாகும் உவப்பதன்கண் குற்றமும் தோன்றாக் கெடும்’ - அறநெறிச்சாரம்.23 என்றார் பிறரும்.

உலகியற்குள் புகுந்து வாழும் தன்மையர்க்கு வேண்டுவனவாகிய பொதுவுணர்வின் படிநிலைகளைச் சுட்ட விழைந்தவர், மாந்தத் தேவையின் முதலுணர்வாகிய ‘அன்புடைமை'யையும், அதனையடுத்த இரண்டாம் உணர்வாகிய விருந்தோம்பலையும், அதற்குத் தேவையான மூன்றாம் உணர்வாகிய இனியவை கூறலையும் அவைவழிப் பிறர் உணரத்தக்க நான்காம் உணர்வாகிய செய்ந்நன்றி அறிதலையும், நிரல் நிறையாகக் கூறியவர், இனி, மனவுணர்வுகளை யடுத்ததும், செயலுணர்வுக்கு அடிப்படையாகியதுமான ஐந்தாம் உணர்வாக நடுவு நிலைமையைக் கூறப் புகுந்தார் என்க. என்னை?

உலகப் பிறரிடத்துத் தொடர்பு கொள்ளும் இன்றியமையா உணர்வுப் படிநிலைகளாக உள்ள இவற்றின் அடிப்படையில்தான், ஒழுங்கமைதியுற்ற மக்களினத்தின் விழுமிய வாழ்வு அமைதல் இயலும் என்னும் கருத்துக் கொண்டவர், அவற்றை நுண்மையாகவும் திண்மையாகவும் விளக்கியும், தமிழிலக்கியப் பரப்பிலும், பிற அறிவியல் வெளிப்பாடுகளிலும், வாழ்வியல் நெறிமுறைகளிலும், இதுவரை வேறெங்கும் வேறெவரும் கடைப்பிடிக்காத முறைபயிற்றலை, நூலாசிரியப் பேராசான் கடைப்பிடித்தும் அவற்றைச் செப்பமாகவும், திட்பமாகவும், நுட்பமாகவும், ஒட்பமாகவும் உரைப்பது, உணர்ந்து போற்றுதற்கும், போற்றிக் கொள்ளுதற்கும், மகிழ்தற்கும் உரியதாம்

6TT5. - -

நடுவு நிலை என்பது பொதுமையறத்திற்கு மிகுதேவையானதொரு நல்லுணர்வு ஆகும். அது தனக்கும் பிறர்க்கும் நடுவாக நிற்கும் ஒர் உள்ளுணர்வு, பிறவும் தமபோல் செய்விக்கும் (120) ஒரு செயலுணர்வும் ஆகும், அது. மேலும் இவ்வுணர்வு அனைத்து வாழ்வினர்க்கும் செயலினர்க்கும் வேண்டுவதோர் உயர்வுணர்வுமாகும். -

செப்பமும் இதுதான் நுட்பமும் இதுதான். ஒப்புணர்வும் இது தான்; மெப்புணர்வும் இதுதான். தகுதியும் இதுதான் புகுதியும் நுழைவாயிலும்) இதுதான். சமநிலையும் இதுதான் சரிநிலையும் இதுதான். நேர்மையும் இதுதான்; ஒர்மையும் இதுதான். நயன்மையும் இதுதான் இயன்மையும் இதுதான். அன்பும் இதுதான் அறிவும் இதுதான்! இன்னும் தெ o சொல்வதானால் உலகியல் அறவுணர்வுக்கும், மூல அறவுணர்வாகிய இறைமையின் பேரறவுணர்வுக்கும் இந் நடுநிலை உணர்வே இயங்கியல்