பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

61


திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார் 61

- ஏமம் ஆப்பு ஏமாப்பு. ஏமம் - காவல் ஆப்பு யாப்பு கட்டு காவற்கட்டு. யாப்பு மேல் கட்டுதலால், மூடுதல் பொருளையும் தரும் பெயர்ச்சொல் ஈறு.

மார் . யாப்பு - மாராப்பு பொல் - யாப்பு - பொல்லாப்பு

செல்வம் வாழ்க்கைக்குப் பயன்படுவதால் பயனையும், பல காப்பு நிலைகளைத் தருதலால், வலிமையான காவலையும் தரும் என்றவாறு, 4. இது, நடுவுநிலையால் ஒருவன் பெறும் சிறப்பையும், அவன்றன் வழியினர் பெறும் பயனையும், வலிமையையும் எடுத்துக் கூறி, அதன் இன்றியமையாமையைக் கூறுதலால், அதன் பின்னர் வைக்கப்பெற்றது.

ககங். நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை

அன்றே ஒழிய விடல். – 113

பொருள்கோள் முறை : இயல்பு பொழிப்புரை நன்மையே தருவதெனினும், நடுவு தவறுதலால் ஆகி வருகின்ற விளைவை, அது வரும் அவ் வேளையிலேயே ஏற்காமல் தவிர்த்து விடுக. - .

சில விளக்கக் குறிப்புகள் :

1. நன்றே தரினும் - நன்மையே தருவதெனினும், தரினும் என்றது, தராது என்பதை உள்ளடக்கியது. இருப்பினும் உலகியல் முறையில், ஒருவேளை அதனால் நன்மையே வருவதெனினும் என்றவாறு, நன்று நன்மை, 2. நடுவு இகந்து ஆம் ஆக்கத்தை - நடுவு நிலைமை தவறுதலால் ஆகிவரும்

விளைவை. -

இகத்தல் கடத்தல், நீங்குதல், தவறுதல் இகந்து கடந்து, நீங்கி, தவறி. - ஆம் ஆக்கம் ஆகி வரும் விளைவு - - - அது செல்வம், பதவி, புகழ், பிற ஆக்கம் தரும் பொருள்கள் அனைத்தையும் குறிக்கும். 3 அன்றே - அற்றையே, அப்பொழுதே, அவ்வேளையே அதுவரும் அவ்