பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 அ-2-8 நடுவு நிலைமை - 12

4. ஒழிய விடல் - தன்னிடம் வந்து பொருந்துமாறு அன்றி, நீங்குமாறு

செய்து விடுக.

- விடல் - விடுக. கைவிடுக.

5. நடுவு நிலைமையைக் கடைப்பிடித்து ஒழுகுவானுக்கு முறையாகவும், அது தவறுவானுக்கு முறையில்லாத வழியிலும் வரும் உலகியற் பொருள்களின் வேறுபாடுகளையும் அவற்றின் நன்மை தீமைகளையும் அவற்றை முறையே ஏற்கவும் தவிர்க்கவும் வேண்டிய மனவுணர்வுகளையும் முன் பாடலினும் இதனினும் பாகுபடுத்திக் காட்டினார்.

ககச. தக்கார் தகவிலர் என்பது) அவரவர்

எச்சத்தால் காணப் படும். †14

பொருள்கோள் முறை : இயல்பு.

பொழிப்புரை : ஒருவர் நடுநிலை உள்ளவர் அல்லது இல்லாதவர் என்கின்ற உண்மை, அவரவர் வாழ்ந்து சென்ற பின், எஞ்சியுள்ள நிலைகளால் கண்டுகொள்ளப் பெறும்.

சில விளக்கக் குறிப்புகள் :

1. ஒருவர் தாம் வாழ்கின்ற முறைகளை வெளிப்படையாகக் காட்டிக்

கொள்ளாமல் இருப்பதே உலகியலாக உள்ளது. - தாம் எவ்வாறான மனநிலை, குணநிலை, ஒழுக்கநிலை கொண்டவர், எவ்வகையாகப் பொருளை ஈட்டுகிறார், அவற்றை எவ்வெவ் வழிகளில் துய்ப்புக்காகவும் எதிர்கால வைப்புக்காகவும் செலவிடுகிறார் . முதலியனவெல்லாம் பிறர் அறிந்திடாத வண்ணமாகவே, மிகப் பெரும்பாலார் நடந்து கொள்வது இயல்பாக இருக்கின்றது. மேலும், நடுவு நிலை உணர்வு என்பது, எவராலும் எளிதில் வெளிப்படையாகக் கண்டுகொள்வதற்கியலாதது; ஒருவருடன் நெருங்கிப் பழகுவார்க்கும் அறிதற்கியலாதது; அடிமனத்துள் உறைவது மனவியற் புலவராலும் ஆராய்ந்து அறிதற்குக் கடினமானது. * இவ்வகையில், ஒருவர் பொதுமையறமான நடுவு நிலைமையுடன் நடந்து கொள்பவரா அல்லரா என்பது அவர் குடும்பத்தாரானும் கண்டுகொள்ள முடியாத அகநடைமுறையாகும்; அஃது, அவர் மறைவுக்குப் பின்னரே புறவெளிப்பாடாகப் புலப்படுகிறது. அதற்கு அவர் விட்டுச் சென்ற எச்சங்கள் சான்றுகளாக அமைகின்றன.