பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

67



மக்கள் பிறப்பதுமான, எதிரிடை நிகழ்வுகளாக உள்ளதைப் பல வரலாற்றுச் சான்றுகள் மெய்ப்பித்து உள்ளன. இவற்றையெல்லாம் முற்பிறவிக் கொள்கையுள் அடக்குவதும் அறியாமையே. அதுவும் மதுவியலின் மூட நம்பிக்கையின் பாற்பட்டதே.

எனவே, இது தொடர்பான பரிமேலழகர் கருத்தையோ அவரை ஒட்டிய பிற உரையாசிரியர்களின் கருத்துகளையோ ஏற்பதற்கு இடமில்லை. அவரது கருத்து வேண்டுமென்றே திணிக்கப் பெற்ற ஒரு கருத்தாகுமே யன்றி, உண்மைக்குப் பொருந்திய கருத்தோ, நூலாசிரியரது கருத்தோ ஆகாதென்று கூறி விடுக்க

- இனி, எச்சம் என்னும் சொல்லுக்குரியனவாக முன்கூறிய பல்வேறு எச்சப் பொருள்களில் ஒன்றையோ பலவற்றையோ நூலாசிரியர் கருத்தாக நாம் கொண்டாலும், அதிலும் இக் கருத்து நிறைவுற்றதாகக் கருதி விடுவதற்கில்லை என்க. என்னை?

ஒருவர், தம் எச்சமாக, அவர் செய்த ஒரு தொழில் அடிப்படையிலோ, ஒர் அரசு பணிநிலையின் அடிப்படையிலோ, நேர்மையாக, ஞாயமாகத் திரட்டப்பெற வேண்டிய மதிப்பீட்டு அளவுக்கு மீறித் தம் சொத்துகளை வைத்துச் சென்றாரெனில், அவரை நடுநிலைமையைக் கடைப்பிடித்து ஒழுகிய ஒருவராக எவ்வாறு கருதுவது? இயலாதன்றோ?

- அதேபோல், மற்றவர் ஒருவர் பெரும்புகழ் பெற்ற அறிஞராக மதிப்பிடப் பெறும் அளவுக்கு தம் நூலகத் திரட்டையோ, அச்சிட்ட நூல்களையோ, அச்சிடப் பெறாத ஆராய்ச்சி நூல்களின் கைப்படிகளையோ தம் எச்சங்களாக விட்டுச் சென்றுள்ளாரெனின், அவரின் கூர்த்தறிவுத் திறன் நோக்கி மட்டுமே, அவரைத் தம் வாழ்நாளில் நடுவுநிலைமையைக் கடைப்பிடித்தவராக எப்படி நாம் கருதிவிட முடியும் 'அரம் போலும் கூர்மையராக விருந்து, மக்கட் பண்பில்லாத மரம் போல்வராக' (997) அவர் இருந்திருக்கலாம் அன்றோ? அந் நிலையில், தம்மையும் பிறரையும் ஒன்றுபோல் கருதும் நடுநிலை யுணர்வினராக அவர் இருந்திருக்க முடியும் என்று மதிப்பிடுவதற்குச் சான்று ஏது?

இனி, வேறு ஒருவர். தம் குடும்பத்தினரையும், மக்களையும் நல்ல வகையில், கல்வி, பண்பு, முயற்சி ஆகியவற்றுள் மேம்பட்டு நிற்குமாறு விட்டுச் சென்றிருப்பினும், அவற்றை மட்டுமே கருத்தில் கொண்டு, அவரின் தகுதி நிலையை அஃதாவது அவர் நடுவு நிலையற்த்தைக் கைக்கொண்டே வாழ்ந்திருந்தார் என்று நாம் எவ்வாறு உறுதி செய்வது?

- எனவே, பொருள் எச்சமோ, புகழ் எச்சமோ அறிவு விளைவு எச்சமோ, மக்கள் எச்சமோ, அல்லது இவற்றுக்கு நேர்எதிரான இகழ், பழி முதலியவற்றின் எச்சமோ, அவரின் நடுவுநிலை உண்ர்வைத் தனித்த