பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

68 அ-2-8 நடுவு நிலைமை - 12



மதிப்பீட்டு நிலையில், உணர்த்தி விடா என்பதை ஒர்ந்து உணர்க.

அவ்வாறெனில், அவரின் நடுவுநிலை யறவுணர்வை அவர்க்குப் பின்னர்ப் பிறர்க்குணர்த்தும் எச்சம்தான் வேறு எத்தகையதோ, என்னவோ எனில் கூறுதும்.

ஒருவரின் மறைவுக்குப் பின்னர் எச்சங்களாக உள்ள மேற்காட்டிய பொருள்களுள் யாதானும் தனித்த ஒன்றோ, ஒரு சிலவோ மட்டுமோ அவரின் தகுதி நிலையைக் கண்டுகொள்ள, வெளிப்படையல்லாத வாழ்வு நிலையமைந்த இவ் வுலகியல் சூழலில், சான்றாக அமையா வென்க. எனவே, அவர் விட்டுச் சென்ற எச்சங்கள் ஆவன, அவரின் வருவாய் அடிப்படை நிலைக்குத் தகுந்த பொருள்நிலை வைப்பு, அறிவுநிலை ஈட்டங்களின் தன்மை, அவற்றின் பெருமை அல்லது தகுதிப்பாடு, அவருக்குற்ற பெயர்ப் பரவலின் புகழ் அல்லது விளம்பரத் தன்மை, அவர் மனைவி, மக்களின் பின்றைய நடைமுறையும் தகுதிப்பாடும் - முதலிய நடுவுநிலையுணர்வுத் தொடர்புடைய எச்சங்களே அவர் தக்கவராக வாழ்ந்தாரா, அல்லது தகவிலராக மறைவு வாழ்க்கை செய்தாரா என்று கண்டு கொள்வதற்கான ஏதுப் பொருள்களாம் என்க. .

- 4. இது. மனவியலும், பொருளியலும், அறிவியலும், உலகியலும் கலந்தியங்கும் ஒருவர் வாழ்வியலில் நடுவுநிலையுணர்வைக் கடைப்பிடித்தொழுகும் அருமைப் பாட்டையும், அவ்வாறு ஒழுகியவரின் பெருமைப் பாட்டையும் மிகவும் நுட்பமாக எடுத்துக் கூறுவதால், நடுவிகந்த ஆக்கம் பற்றிக் கூறிய முன்னயதன் பின் வைக்கப்பெற்றது.

ககரு. கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க்கு) அணி

-115 பொருள்கோன் முறை : இயல்பு.

பொழிப்புரை: (முன் இருந்த) நலன்கள் குறைந்து வருவதும், (முன் இருந்ததற்கு மேல்) அவை பெருகி வருவதும், (உலகில் யாவர்க்கும்) இல்லாத நிகழ்வுகள் அல்ல. (அவை எல்லார்க்கும் பொதுவானவையே. ஆனால்) நற்குணங்கள் நிறைந்த பெரியோர்கள், இவ் விறக்க ஏற்றங்களால்) தம் நெஞ்சத்துள்ள நடுவுநிலை (என்னும் நேர்மை) உணர்வில் திரிபடையாமல் இருப்பதே (அவர்களது) பெருமைக்கு உரியதாகும்.

சில விளக்கக் குறிப்புகள் :

1 கேடும் பெருக்கமும் இல்லல்ல - முன் இருந்த நலன்கள் Dig வருவதும், முன் இருந்ததற்கு மேல் அவை பெருகி வருவதும், உலகில்