பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

73


திருக்குறள் மெய்ப்பொருளுரை -பெருஞ்சித்திரனார் 73

மனம் கெடுமாயின் பண்பு கெடும்; ஒழுக்கமும் கெடும்; பின்பு வாழ்வும் கெடும் என்றவாறு,

‘மனந்துரயார்க்கு எச்சம் நன்றாகும்’ - 456 - என்னும் இடத்தும் இதை வலியுறுத்துவார். 3. தன் நெஞ்சம் நடுவுஒரீஇ அல்ல செயின் - இதுவரை நடுவு நிலையைக் கடைப்பிடித்து ஒழுகி வந்த தனது நெஞ்சம் அந் நடுவுநிலை உணர்வைத் தவிர்த்துவிட்டு, அஃது அல்லாதவற்றைச் செய்யத் துணியுமாயின்.

- நடுவுஒரீஇ நடுவுநிலை உணர்வைத் தவிர்த்துவிட்டு.

ஒருவுதல் - தவிர்த்தல். ஒருவி என்றாகி இன்னிசை அளபெடையின் ஒரீஇ என்று நின்றது. - *

- நடுவுஒரீஇ என்றதால், இதுவரை அது நடுவுநிலையைக் கடைப்பிடித்து வந்தது உணர்த்தப் பெற்றது.

- நெஞ்சம் செயின் என்றது. நினைவே வலிந்து செயலாவது பற்றி, இனி, நினைவானும் நடுவுநிலை தவிர்தலை எண்ணக்கூடாது என்றார் என்க.

அல்ல - என்றது நடுவுநிலை அல்லாதவற்றை எனக் குறித்தது. 4. யான் கெடுவல் என்பது அறிக யான் இனிப் படிப்படியாகக் கெட்டுப்

போவேன் என்பதை அறிவான் அறிந்து கொள்ளட்டும்.

- கெடுதல் நிலையில் தாழ்தல், இழிதல்

அறிக என்றது அறிவால் அறிந்து கொள்க. மனம் எண்ணுவதை அறிவு நெறிப்படுத்துவதை உணர்த்திற்று. -

- யான் என்றது மனத்தையும் அறிவையும் உடலையும், அம் மூன்றனது வாழ்வு இயக்கத்தையும் சேர்த்துச் சொன்னது.

அல் - தன்மை ஒருமை எதிர்கால வினைச்சொல் ஈறு. அதன் பன்மை அம் - கெடுவம். -

- கெடுவது எவ்வாறெனின், மனம் நடுவு நிலையைத் தவிர்க்க எண்ணி, அது செயலுக்கு வருமிடத்து, இதற்கு முன்னர் அவ்வாறு இல்லாதவர், இக்கால் இவ்வாறு தாழ்ந்து இயங்குகின்றாரே என்று பிறர் உணர்ந்து, இவரொடு தொடர்பு தவிர்தலும், ஆதரவை நீக்குவதும், மற்றும் இவரது ஆக்கத்தைத் தடுக்க முற்படுவதும் நடுவுநிலை தவறிச் செய்வதால் குற்றங்கள் நேர்ந்து, அவற்றால் ஒறுக்கப் படுவதும் படிப்படியாக நிகழும். ஆகையால், இவர் நிலையும் அதற்கேற்பத் தாழ்ந்து வரும் என்க. நிலை தாழவே இவர்க்குற்ற நலனும் வளனும் குறைந்து, துன்புற நேரும் என்றவாறு என்க.

இதற்குப் பரிதியார், தனக்கு இறுதி வரும் என்ற காலம் நடுநிலைமையை விடும் என்றறிக என்று விளக்கம் தருவது முன்