பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

75


திருக்குறள் மெய்ப்பொருளுரை பெருஞ்சித்திரனார் 75

தங்கியான் - நின்று ஒழுகியவன். தங்குதல் - நிற்றல் நிலையாக நிற்றல். தக்கு தங்கு. - தாழ்வு நிலையினின்று கீழிறங்குதல் - இழிதல். - நடுவுநிலை பேணுபவர் உலகியல் சூழ்வுகளைக் கடைப்பிடியார்.

ஆகையால், பொருள்நிலையில் தாழ்ச்சியுறவும் வழியுண்டு என்பதைக் குறிப்பால் உணர்த்தினார் என்க. 3. உலகம் கெடுவாக வையாது - உயர்ந்தோர் அதைக் கேடாகக் கருதி

இழிவு கூறார்.

‘உலகம் என்பது உயர்ந்தோர் மேற்றே என்றார் ஆகலின்,

உயர்ந்தோரைக் குறித்தது. இன்னும் அவரே மக்கள் மதிப்பீடு செய்தற்கு

உரியவராம் என்க.

கெடுவு - கெடு என்னும் வினைச் சொல், உகர ஈறு பெற்றுப் பண்புப் பெயராக நின்றது. 4. நடுவுநிலை தவறிக் கெட்டவரின் தாழ்ச்சிகளை முன்னைய பாடல்களில் கூறியவர். அதில் தவறாது நின்றவர் தாழ்ச்சி யுறினும், அதை உயர்ச்சியாகவே பெருமையாகவே உலகோர் கருதுவர் என்றதால், அவற்றின் பின்னர், இது, வைக்கப்பெற்றது.

ககஅ. சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்து)ஒருபால் கோடாமை சான்றோர்க்(கு) அணி. - 118

பொருள்கோள் முறை : -

சான்றோர்க்கு அணி, சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்து)ஒருபால் கோடாமை.

பொழிப்புரை சால்புள்ள நடுநிலையாளர்க்குச் சிறப்பாவது, ஒரு சார்பாகச்

சாய்ந்து நில்லாமல், சமநிலை நின்று, இரண்டு பொருள்களின்

எடைச்சீர்மையை வரையறுத்துக் காட்டும் துலாக்கோலைப் போல்

இயங்குவதே. - i.

சில விளக்கக் குறிப்புகள் :

1. இதுவரை, நடுவுநிலைமை பற்றிய சிறப்புகளையும் அதைப்