பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

அ28 நடுவு நிலைமை - 12

உருவாகும். இந்தச் சொல்லே செயலுக்கு அடிப்படையாக இருக்கும். இத்தொடர்பை இந்தக் குறளில் நன்கு விளக்கிக் காட்டுகிறார் ஆசிரியர்.

உள் கோட்டம் ஒருதலையா இன்மை பெறின் - உள்ளத்தில் கோடுதல்

இல்லாத உணர்வு, உறுதியாக இல்லாமை பெறின் உள்ளம் சம நிலையில் இருந்தால்தான் சொல்லும் செயலும் சமநிலையில் இருக்கும் என்பது ஒரு மனவியல் உண்மை. -

‘தன் நெஞ்சு அறிவது பொய்யற்க - - - (293) ‘உள்ளத்தால் பொய்யாது ஒழுகின்’ (294) ‘மனத்தொடு வாய்மை மொழியின் (295) செய்வினை செய்வான் செயல்முறை அவ்வினை . உள்ளறிவான் உள்ளம் கொளல்’ (677) - என்பனவும்,

‘உள்ளத்தால் உள்ளலும் திதே’ (282) ‘உள்ளத்தால் உள்ளான் வெகுளி’ (309) ‘உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல்’ - (594) ‘உள்ளத் தனையது உயர்வு’ (595) ‘உள்ளத்தின் உள்ளக் கெடும்’ (622) ‘உள்ளற்க உள்ளம் சிறுகுவ’ - (798)

- என்பனவும் அது.

- எனவே, உள்ளத்தின்கண் கோடுதல் தன்மை உறுதியாக இல்லாமல் இருப்பின் - என்றார். - .

அவ்வாறு உறுதியாக இருந்தால்தான் சொல்லிலும் அந்தக் கோடுதல் தன்மை இல்லாமல் இருக்கும். அதையடுத்துச் செயலிலும் அஃது இல்லாமல் இருக்கும். ----

முன்னரே நெஞ்சத்துக் கோடாமை (1) என்றதை மேலும் உறுதி செய்து கூறினார், என்க.

3 செப்பம் சொற்கோட்டம் இல்லது நடுவு நிலைமை சொல்லிலும் கோட்டம்

இல்லாது செய்யும்.

அஃதாவது, மனம் கோடுதலில்லாம்ல் உறுதியாக இருந்தால் தான். அதிலுள்ள நடுவுநிலை உணர்வும் சொல் கோடுதல் இல்லாமல் செய்யும் - -

நடுவுநிலைமை உணர்வு பால் என்று கொண்டால், அப் பால் கெடாமலிருப்பதற்கு, அது வைக்கப்பெறும் கலமும் (ஏனமும்) தூய்மையாக இருத்தல் வேண்டும். இதனை, .