பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 அ-2-8 நடுவு நிலைமை - 12

முதலிய பிறவும், எவ்வாறு தாம் விரும்புவன போலும், வாங்குவன போலும் இருந்தனவோ, அவ்வாறான நிலைகளிலேயே, அஃதாவது அவற்றின் மிகக் கூடுதல் செய்யாமலும், தரம் குறையாமலும் பேணிக் காத்து (ஒர் அளவான ஊதியத்திற்கு விற்றல் செய்யின் என்றவாறு, என்க.

- அதுதான் இத் தொடரின் உயிர்ப் பொருளாம் என்க. - இவ்வாறு செய்வதில்தான் தமபோல் பேணுதல் தன்மை உள்ளது. - அவற்றை ஒன்றுக்குப் பத்தாக, நேர்மையற்ற விலைக்கு விற்பின், அந்நிலையில் அவற்றைத்தாம் வாங்க விரும்பி யிருக்கவோ, ஒருப்பட்டிருக்கவோ இருந்திருராதோ, அப்படித்தான் தமபோல் பிறர் வாங்குதல் பொழுதினும், அவ்வாறு செய்வது நடுநிலையற்றது என்று கருதுதல் வேண்டும் என்பதே ஆசிரியர் கருத்தாம் என்க. இல்லெனின், தம போல் பேணிச் செயின் என்பதற்குப் பொருளில்லாமற் போகும் என்க.

- இதில், கொள்வது மிகை கொளாது, கொடுப்பதும் குறை கொடாது என்பது மட்டும் பொருளன்று. l

- கொள்வது மிகை கொளாது என்பது வாங்குபவர்க்கு உரிய கருத்தாகக் கொள்வது பொருந்தாது. கொடுப்பவர்க்கு உரிய கருத்தே அது. அதில் பேணுதல் தன்மை என்பது எங்குளது என்பது விளக்கம் பெறவில்லை. பொருள்கள் வாங்கப் பெற்றபின், வாங்கியவர்க்குரிய கருத்தே அது. இதனை, இங்கு, நுண்ணிதின் நோக்கி உணர்தல் வேண்டும். பழுதுற்றவற்றைப் பிறர்க்கு விலைக்கு விற்றல் கூடாது என்பதற்காகவே அவ்வாறு கூறினார், என்க. 4. வாணிகம் செய்வார்க்கு வாணிகம் - வாணிகம் செய்பவர்க்கு அதுவே

நடுவுநிலை தவறாத வாணிகம் ஆகும். - வாணிகம் வாங்கி விற்கும் தொழில்.

- வியாபாரம் - வடமொழிச் சொல். - பண் பண்ணு - பண்ணியம் விற்றற்குரிய பலபொருள்.

நுகர்பொருள். ... “ - பண் - வண் - வண்ணி - வண்ணித்தல் பொருள்களின் வகை, தொகைகளை, அவற்றின் விலைகளை விளக்கிக் கூறுதல் செய்து

வணி - வண்ணி - வண்ணிகன் - வணிகன் அவ்வாறு கூறி விற்றல்

செய்பவன். - - வணி - வாணி - வாணிகன் அவ்வாறு விளம்புதல் விளக்கிச் சொல்லுதலில் திறம் கொண்டவன்.