பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

91


திருக்குறள் 9lou-Surgosibson - பெருஞ்சித்திரனார் 91

- ஆயினும், இதில் ஆசிரியர் குறித்திருக்கும் ஆரிருள் உரையாசிரியர் பிறர் கருதுதல் போல், நரகத்தைக் குறிக்க வில்லை என்பதையும், அது காலவிருளையே குறித்தது என்பதையும் தீரத் தெளிந்து கொள்க.

கஉஉ. காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்

அதனினுங் கில்லை உயிர்க்கு. - 122

பொருள்கோள் முறை :

உயிர்க்கு ஆக்கம் அதனின் ஊங்கு இல்லை காக்க பொருளா அடக்கத்தை.

பொழிப்பு ை மக்களுயிர்க்குப் பெருமை, செல்வம், வாய்ப்பு, புகழ் முதலிய பல்வகையான ஆக்கங்களை உருவாக்கித் தருவது அடக்கத்தை விட வேறில்லையாதலால், அதனை ஒரு முதலீட்டுப் பொருளாகக் காத்துக் கொள்ளுதல் வேண்டும். -

சில விளக்கக் குறிப்புகள் : - - 1. உயிர்க்கு ஆக்கம் அதனின் ஊங்கு இல்லை - மக்களுயிர்க்குப் பெருமை, செல்வம், வாய்ப்பு, புகழ் முதலிய பல்வகையான ஆக்கங்களை உருவாக்கித் தருவது அடக்கத்தை விட வேறில்லையாதலால்,

- மக்களுக்கு என்றதை உயிர்க்கு என்றது. மக்கள் தம் உடல் வாழ்க்கைக்குப் பின்னரும் சிறப்பு நிலையால் புகழ்பெற்று நிற்றலால் அதனை உயிர்மேலேற்றிக் கூறினார்.

- புகழ் உயிரைச் சார்ந்து நிற்றலை ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதிய மில்லை உயிர்க்கு (23) என்னும் கூற்றாலும் உறுதிப்படுத்துவார்.

- அடக்கம், ஒருவரின் தகுதிப் பாட்டை மிகுத்துக் காட்டும் ஒர் ஒழுகு முறை.

கல்வியானும் செல்வத்தானும் மிக்குயர்ந்தோனாயினும் அடக்கம் உடையவரையே மக்கள் அத்தகுதி நிலைப்பாடுகளினும் மேலாக மதிப்பர். அது பெருமை யாயிற்று.

அடக்கம் உடையவரிடமே அதிகார நிலையில் இடம் தருவர். அது புகழாயிற்று.

பிறவும் அன்னவாறே ஆமென்க. - 2. காக்க பொருளா அடக்கத்தை (எனவே மூல முதலீட்டுப் பொருளாக

அடக்கத்தைக் காத்துக்கொள்க: