பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

93


திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார் 93

அடங்கி ஒழுகுவார் ஆயின்

மக்கள் இயற்கையாகவே, அவரவர் மரபு, பிறப்பு நிலை, வளர்ச்சிக் சூழல், பயற்றுவிப்பு, தன்னு க்கம் முதலியவற்றின் வழி, ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையான அறிவுணர்வைப் பெற்றிருப்பர்.

கழி இளமையில் அவர் க்குற்ற அறிவுணர்வு அவர்க்கு விளங்காவிடினும், நாட் செல்லச் செல்ல அந்நிலை அவர்க்குப் படிப்படியாய் விளங்கித் தோன்றும் என்பது மனவியல் உண்மை. என்னை?

நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன் - உண்மை யறிவே மிகும்’ - - 373 - என்பார் ஆகலின்.

அவ் வறிவு தமக்குத் தெளிவாக விளங்கித் தோன்றும் பொழுது, அவரவர் அவ்வவ் வறிவுத் துறையில் தம்மை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்டு, மேலும் மேலும் அத்துறையில் முயன்று முழுமை பெறுவதே வாழ்க்கையின் வெற்றிக்கும் நிறைவுக்கும் உதவும் ஒரு வாழ்வியல் உத்தியாகும். - இக் கருத்தை நூலாசிரியரும் பல விடங்களில் எடுத்துக் கூறுவது காணத்தக்கதாகும். - தெரிந்து செயல் வகை அதிகாரத்துள் வரும்,

ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று போற்றினும் பொத்துப் படும்’ - 468 என்பதும், வலியறிதல் அதிகாரத்துள் வரும், ‘ஒல்வது) அறிவ(து) அறிந்ததன் கண்தங்கிச்

செல்வார்க்குச் செல்லாதது) இல், - - - 472 என்பதும், ஆள்வினையுடைமை அதிகாரத்துள் வரும்,

‘அறிவறிந்து ஆள்வினை இன்மை பழி’ - 6 18 என்பதும், அவையஞ்சாமை அதிகாரத்துள் வரும்,

ஆற்றின் அளவறிந்து கற்க - 725

என்பதும் இக் கருத்தை மேன்மேலும் வலியுறுத்துவனவாகும்.

- ஆறு என்பது இவ் விடத்து வழி, துறை என்று இரண்டு வகையானும் பொருள் தரும். 2. செறிவு அறிந்து சீர்மை பயக்கும் - அவ்வடக்கப் பண்பு, பிறர் அறிந்து,

அவர்க்கு ஏற்ற பெருமையையும் புகழையும் தரும்படி செய்யும்.