பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 அ-2-9 அடக்கம் உடைமை 13

செறிவு - அடக்கம் எனும் பண்பு.

ஆசிரியரும், நன்றென்ற வற்றுள்ளும் நன்றே முதுவருள் முந்து கிளவாச் செறிவு’ - 715 என்றவிடத்துச் செறிவு என்பதை அடக்கம் என்றே கொண்டார்.

செறிதல்- நிறைந்திருத்தல், நிறை என்னும் சொல்லும் அடக்கத்தைக் குறிக்கும்.

நிறைந்திருப்பது அடங்கியிருக்கும். நிறைகுடம் தளும்பாது என்பது பழமொழி. ‘வற்றிய ஒலை கலகலக்கும் எஞ்ஞான்றும் பச்சோலைக் கில்லை ஒலி’ - நாலடி : 256 “சிற்றுணர்வோர் என்றுஞ் சிலுசிலுப்பர் நன்றமைந்த முற்றுணர்வோர் என்றும் மொழியாரே - வெற்றிபெறு வெண்கலத்தின் ஒசை மிகுமே; விரிபசும்பொன் ஒண்கலத்தின் உண்டோ ஒலி” - நீதிவெண்பா, - என்றார் பிறரும்.

- சீர்மை பெருமையும் புகழும்.

‘சீர்மை சிறப்பொடு நீங்கும்’ - 975 என்பதில் பெருமையும், -

‘சிறுமை பலசெய்து சீரழிக்கும் சூதின் - 934 என்பதில் புகழும் குறித்தமை காண்க. - இவ்விடத்து இரண்டும் குறித்தது. - பயத்தல் பெற்றுத் தருதல். - - 3. இஃது, அடங்கி ஒழுகுதலின் பயன்கள் கூறுதலால் முன்னதன் பின்னர்

வைக்கப் பெற்றது. -

கஉச நிலையில் திரியாது) அடங்கியான் தோற்றம்

மலையினும் மாணப் பெரிது. - #24

பொருள்கோள் முறை : இயல்பு.

பொழிப்புரை தம் கடைப்பிடியிலிருந்து (எவ்வகையான ஏற்றத்தாழ்விலும்) சிறிதும் மாறுபடாமல் அறநெறியில் அடங்கியொழுகுபவனுடைய