பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

95


திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார் 95

முன்னேற்றம், ஒரு மலையினுடைய (வியப்பு, பெருமை, நிலைப்பு ஆகிய) தன்மைகளைவிட மிகவும் பெரியதாகும்.

சில விளக்கக் குறிப்புகள் :

1. இஃது, அடக்கத்திற்கு மேலும் ஒருபடி சிறப்பும் வலிவும் ஊட்டிய

கருத்தையுடையதாகும். .

. அஃதாவது, அடங்கியொழுகுதல் சிறப்பு. அதே நிலையில் தம் கடைப்பிடியிலிருந்து எந்தச் சூழ்நிலையினும் வழுவாது இயங்குதல் வேண்டும். இனி, அதனினும் மேலாய் அறநெறியில் அவ்வியக்கம் இருத்தல் வேண்டும் என்று இறுகல் நிலை கூறுவார்.

- எனவே, இக் குறளினது கருத்தில் அறன்வலியுறுத்தலும், நடுவுநிலைக் கருத்தும் பொருந்தி இயங்குதலைக் காணலாம். 2. நிலையில் திரியாது அடங்கியான் - தம் கடைப்பிடியிலிருந்து எவ்வகையான ஏற்றத்தாழ்வினும் சிறிதும் தளர்வுறாது, நெகிழ்ச்சி கொள்ளாது, அறநெறியில் அடங்கி ஒழுகுபவனின். - இதில், நிலையில் என்றது, தம் கடைப்பிடியில் கொள்கையில் உறைத்து

நிற்பது. - திரியாது’ என்றது, அறநெறிக்கண் மாறுபடாது நிற்றல் என்பது, - அடங்குதல்’ என்றது, அடங்கி யொழுகுதல், - இதுபோல், ஒருவன் எந்நிலையிலும் நிலைகுலையாது உளந்தளராது

உறைத்து நின்று இயங்குதல் வேண்டும் என்பதை வேறு சில இடங்களிலும் வலியுறுத்தியுள்ளார்; வலியுறுத்துவார். முன்னர், ‘அறன்வலியுறுத்தல் அதிகாரத்தில்,

‘வீழ்நாள் படா.அமை நன்றாற்றின் - (38) - என்றதிலும், இல் வாழ்க்கை அதிகாரத்தில்,

ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை நோற்பாரின் நோன்மை உடைத்து’ - (48) - என்றதிலும், நடுவு நிலைமை அதிகாரத்தில் கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக் கோடாமை சான்றார்க்கு அணி - (115) - என்றதிலும், அந்நிலையில் திரியாது ஒழுகுதல் என்பது ஒவ்வொரு

வகையில் வலியுறுத்தப் பெற்றதை உற்றுக் காண்க. - இனி வரும் சான்றாண்மை என்னும் அதிகாரத்திலும், ‘ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு ஆழி எனப்படு வார்’ - (989)