பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 அ-2-9 அடக்கம் உடைமை 13

என்று, நிலையில் திரியாது உறுதியின் கடைப்பிடிக்கும் உணர்வை,

இன்னும் ஒருபடி மேலே சென்று திண்ணிதாக வலியுறுத்துவார். - இவ்வாறு, எந்த உயர் உணர்வைக் கடைப்பிடித்து ஒழுகுதல் இன்றி யமையாதது என்பதை, ஆங்காங்கு ஒவ்வோர் எடுத்துக்காட்டான் வலியுறுத்துவது, நூலாசிரியர் இயல்பு என்க. - 3. தோற்றம் மலையினும் மாணப் பெரிது - விளங்கித்தோன்றுதல்- முன்னேறி

நிற்றல், மலையைவிட மிகப் பெரியது. . இக்குறளுக்கே இதில் உள்ள தோற்றம் என்னும் சொல்தான் மிகவும் முகாமை வாய்ந்தது. ஏனெனில் இதிலுள்ள மூலக் கருத்தையும், எடுத்துக்காட்டையும் பொருள் விளங்கும் வகையில் இணைத்து நிற்கும் கருத்து இச் சொல்லில்தான் உள்ளது. - அந்நிலைகளைச் சற்று ஆழமாகப் பார்த்தல் வேண்டும்.

இக்குறளின் மூலக் கருத்து: . ‘தம் கடைப்பிடியிலிருந்து எவ்வகையான ஏற்றத்தாழ்விலும் சிறிதும் மாறுபடாமல் அறநெறியில் இயங்கும் ஒருவன் என்பது.

இதற்குரிய எடுத்துக்காட்டு, ‘மலையினுடைய பெருமை - என்பது. - இவ்விரு முதற் கருத்தையும், எடுத்துக்காட்டையும் இணைக்கின்ற பணியை இதிலுள்ள தோற்றம் மாண பெரிது என்னும் மூன்று சொற்களும் செய்கின்றன.

யாருடைய தோற்றம் எனின் முதல் கருத்தில் உடையவனுடைய தோற்றம்’ என்பது விடை .

தோற்றம் எப்படிப்பட்டது. என்னும் வினாவிற்கு விடை தருவது, ‘பெரிது என்னும் சொல். -

‘எப்படிப் பெரிது என்னும் வினாவிற்கு விடை மலையினும் மாணப் பெரிது அஃதாவது, மலையைவிட மிகவும் பெரியது என்பது. - இவ் விளக்கங்களை வைத்துப் பொருத்தினால் கிடைக்கும் கருத்துக்கு

முழு விளக்கமாக நிற்பது தோற்றம் என்னும் ஒரு சொல்லே என்க.

எனவே, தோற்றம் என்பதற்கு ஆசிரியர் கருதிய சரியான பொருள் என்ன என்று உய்த்துணர்ந்தால்தான், மலையினும் மாணப் பெரிது. என்னும் எடுத்துக்காட்டு முடிவுக்குச் சரியான பொருள் கூற முடியும். இல்லெனில், இவ் வுவமை வெறும் மிகுபுனைவு (exaggeration) எனும் அறநூலுக்குப் பொருந்தாத கற்பனைக் கருத்தாகி, நூலாசிரியர்க்கு இழுக்கைத் தந்து விடும் என்க. குறட்பா 103இல் உள்ள நன்மை கடலின் பெரிது என்னும் அடிக்கான விளக்கத்தைக் காண்க)