பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/100

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

98

அ-2-17 தீவினையச்சம் -21


விலகுதற்கும், பலவகையானும் உளவு சொல்வார். ஆசிரியர்.

- அஃதாவது, முதற்கண் பகையை நட்புச் செய்தற்கு முயலுதல் வேண்டும். அல்லது அஃது இயலவில்லையாயின், அதைத் தவிர்த்தற்கேனும் முயலுதல் வேண்டும். இவற்றைக் காலமறிந்து, இடமறிந்து, செய்தல் வேண்டும்.

- இவற்றுக்குத் தக்க பெரியார்களை, நடுநிலையுள்ளவர்களை, பொது அறம் கருதுபவர்களைத் தக்க துணையாகக் கொள்ளுதல் வேண்டும்.

அத்துடன்,

- பகையைப் போக்கிக் கொள்ள வேண்டும் என்று

கருத்துக் கொண்டவர், அனைத்தினும் மேலாக, முன்னிருந்த பகையுணர்வுகளை வளர்த்துக் கொள்ளும் சிறுசிறு பூசல்களில் ஈடுபடாது, அடங்கியிருத்தல் தலையாய கடைப்பிடியாகும்.

- அவற்றை நிரல் நிறையாகக் காண்போம்.

1) ஓர் இல்லறவியலான், தனக்கு ஏதோ ஒருவகையில், அண்டை அயலில் உள்ளார் கடும் பகையாகச் சூழின், முதலில் அங்கிருந்து இடம் பெயர்ந்து, வேறு எங்கேனும் ஒரு புதிய சூழலில் குடியமர்தல் வேண்டும்.

2) அத்தகு நிலையில், அங்கிருந்து பெயர வேண்டுதல் தேவையில்லாதவிடத்துத் தன் பகைவர்க்கும், தனக்கும் பொதுவான நடுநிலைச் சான்றோர் ஒருவரைத் தான் கண்டுபேசி, தன் பாங்கின் நிலைகளை நன்கு எடுத்து விளக்கித் தனக்கும், பகைக்கும் ஒப்புரவு செய்ய, சந்துசெய்ய, முயலுவித்தல் நலம் தரும்.

3) அல்லது, தன் பகைக்கு ஏதோ ஒரு வகையில் உறவாகிக் கொள்ளும் சூழ்நிலையை உருவாக்குதல் வேண்டும். இதற்கும் முன்னைய சான்றோர்களைத் துணையாகக் கொள்ளலாம்.

- உறவாகிக் கொள்ளும் சூழல் என்பது திருமணத் தொடர்பு, நில, புல முதலிய சொத்துத் தொடர்பு போன்ற நிலைகள்.

4) பகைவர்க்குத் தேவையான நிலையில், தன்னால் இயன்ற வகையில் பொருளாலோ, பணிநிலைகளினாலோ, வழிச்செலவு, நல்லது கெட்டது போலும் குடும்ப நிகழ்வு திலைகளிலோ, தானே முன்சென்று உதவுதல்.

5) பகைவர்க்கு ஏதேனும் இடர்ப்பாடான சிக்கல்கள் வரும் நிலையில், அவர்க்கு எதிரானவர்களேயேர், அல்லது எதிரான சூழல்களையோ, தான் போய் முன்நின்று, பகைவர் சார்பாக, அவற்றைப் போக்குதற்கு உதவியாய் நிற்பது.