பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

100

அ-2-17 தீவினையச்சம் -21



'அத் தீவினையாகிய பகை நீங்காது, புக்குழிப்புக்குக் கொல்லும்' என்று பொருள் தருகின்றனர்.

- 'புக்குழிப் புக்குக் கொல்லும்' என்பது, தீவினை செய்தானின் உயிர், இப்பொழுதைய உடலைவிட்டு நீங்கி, வேறு பிறவிகளில் எந்தெந்த உடல்களில் புகுகின்றதோ, அந்தந்த உடல்களில் எல்லாம் தானும் புகுந்து, அவனுக்குத் தீங்கு விளைவிக்கும் என்று பொருள்படும்.

- இது தேவையில்லாத அச்சுறுத்த மிகைக் கற்பனை, என்க.

- இஃது, அளறு (நரகம்) தொடர்பான அச்சுறுத்தம் மக்கள் அறிவறியாக் காலத்துக் கற்பித்துச் சொல்லப் பெற்றது. இக்கால் அது பொருந்தாதது மட்டுமன்று, மூடநம்பிக்கையுமாகும் என்று மக்களால் உணரப் பெற்றுவிட்ட தென்க. எனவே, அதுபோலும், 'நரக' 'மோட்ச' வேதவியல் கற்பனைகள் இனி எடுபடா வென்க.

- இனி, 'வீயாது' என்னும் ஒரு சொல் 'வீ' என்னும் ஒரெழுத்தொரு சொல்லின் விரிவாம் என்க.

- 'வீ' - 'வீழ்தல்' - 'அழிதல்'.

- மரத்தினின்றோ, செடியினின்றோ கீழே வீழ்ந்து கிடக்கும், பூவிற்கு, 'வீ' என்னும் ஒரு சிறப்புச் சொல் உண்டு.

- முகை, மொட்டு, அலர், மலர், வீ. செம்மல் என்னும் சொற்கள், மலரின் பல வளர்நிலைகளைப் படிப்படியே குறிக்கும் சொற்களாவன.

- மலரின் ஆறு வளர்நிலைகளில், 'வீ' ஐந்தாவது நிலை. இது சிலகால் மலர்ந்துள்ள மலரையும் குறிக்கும்.

- இதுபோலும் சொற்கள், உலக மொழிகளில், அருஞ்சொல் வளமிக்க தமிழில் தவிர, வேறு எம்மொழியிலும் காணக் கிடைப்பதில்லை, என்க.

- 'வீ' என்பது வீழ்ந்துள்ள மலரைக் குறிக்கும்; 'வீஇ' என்பது வீழ்ந்து விட்ட அதன் செயலைக் குறிக்கும். 'வீ' பெயர்ச்சொல். ‘வீஇ’ வினைச்சொல்.

'வேங்கை வீ உகும் ஒங்குமலைக் காட்சி’ - நற்: 12:7

‘சிறு 'வீ' ஞாழல் துறையுமார் இனிதே’ - நற்: 35:5

'கோடல், எதிர்முகைப் பசுவீ முல்லை’ - குறுந்: 62:1

‘வெள்வித் தாழை திரையலை’ - குறுந்: 163:4

‘எக்கர் ஞாழல் இகந்துபடு பெருஞ்சினை
வீ இனிது கமழும்’ - ஐங்: 148:1-2