பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

103


பெயர் பெற்றது.

- தீயவற்றைப் 'பாவம்’ என்பது, மதம்.

- இஃதோர் எடுத்துக்காட்டு உவமை.

- வீயாது : விட்டு விலகாது, விட்டு நீங்காது.

- அடிஉறைவது : காலடினின் கண் தங்கிக் கிடப்பது.

- அற்று - அன்ன தன்மையது.

3) இது, முன்னைக் குறளில் கூறப்பெற்ற ’வீயாது பின் சென்று அடும்’ என்பதற்கு ஒர் எடுத்துக்காட்டால் விளக்கம் கூறியதாகலின், அதனை அடுத்து வைக்கப் பெற்றது.


உ0௯ தன்னைத்தான் காதலன் ஆயின் எனைத்தொன்றும்
துன்னற்க தீவினைப் பால். - 209

பொருள்கோள் முறை:

தன்னைத்தான் காதலன் ஆயின்,
எனைத்தொன்றும் தீவினைப்பால் துன்னற்க.

பொழிப்புரை: ஒருவன், தன் மேலேயே விருப்பம் உடையவனாக இருப்பின், அவன் என்ன வகையிலேனும் தீயவினைகளில் பொருந்தாமல் இருக்கவேண்டும்.

சில விளக்கக் குறிப்புகள் :

1) தன்னைத்தான் காதலன் ஆயின்: ஒருவன் தன்மேலேயே விருப்பம் உடையவனாக இருப்பின்.

காதலன் : விருப்பம் உடையவன்.

- தன்னையே விரும்புவது, தன் நலன்களிலேயே கருத்துடையவன் ஆதல்.

- காதல் - மிகுவிருப்பம்.

2). எனைத்தொன்றும் தீவினைப்பால் துன்னற்க: அவன் என்ன வகையிலேனும் தீயவினைகளில் பொருந்தாமல் இருக்கவேண்டும்.

- எனைத்தொன்றும் : எந்த வகையிலும் ஒன்றிலேனும்.

தீவினைப்பால் : தீவினைச் செயல்களின் பால் - தீவினைகளிடத்து