பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

106

அ-2-17 தீவினையச்சம் -21


ஆற்ற விளைவது நாடு’ - 1732

'அருஞ்செவ்வி இன்னா முகத்தன் பெருஞ்செல்வன்
போய்கண் டன்ன துடைத்து’ - 1565

- என்பவற்றுள் வரும் 'அரும்' என்னும் சொற்கள் இன்மைப் பொருளில் வந்தமை கண்டு கொள்க.

- இனி, திருக்குறள் - பரிமேலழகர் உரைக்குத் தெளிபொருள் விளக்கமும், கருத்துரையும், குறிப்புரையும் எழுதிய கோ. வடிவேலு அவர்கள் (1904), 'கேடரியன் என்பது அருங்கேடன் என்றாயது வடமொழிப் புணர்ச்சி' என்று இதற்குக் குறிப்புரை எழுதியது, சூத்திரக் குறும்பு!

3) ஒருவன் தீவினை செய்ய நினைப்பது அல்லது செய்வது தனக்கு விரைந்து நலன்கள் தேடிக்கொள்வதற்காகவே ஆகும் என்பது பொது உலகியல் நடைமுறை.

- இவ்வுலகியல் நடைமுறையை முன்வைத்து, அவ்வாறு அவன் செய்யாமலும், அதன்பொருட்டுத் தீவினை செய்யாமலும் இருப்பின், அவனுக்கும் கேடுகள் இல்லாமற் போகும் என்றார், என்க.

4) இது, தன்னலத்தின் பொருட்டாகிலும் ஒருவன் தீமை செய்யாதிருக்க என்று கூறிய முன் குறளுக்கு, மேலும் ஒரு விளக்கமாக, அப்படிப்பட்டவனுக்குக் கேடுகள் வருவதில்லை என்று இதில் உறுதி கூறியதால், இஃது அதையடுத்து வைக்கப் பெற்றது என்க.