பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

107





அ-2 இல்லறவியல்
அ-2-18 ஒப்புரவறிதல் -22
அதிகார முன்னுரை

‘ஒப்புரவறிதல்’ என்பது ஒப்பு + உரவு + அறிதல் என்னும் மூன்று சொற்களின் கூட்டுச்சொல் ஆகும்.

இவற்றுள், ஒப்பு என்பது சமநிலை. அஃது உலக நடைமுறையின்பாற்பட்டது. உரவு என்பது வலிமை என்று பொருள் ஒரு பெயர்ச்சொல் பின்னொட்டு (Suffix). அஃதாவது ஈற்றுநிலை.

ஒப்புரவு, துப்புரவு, நல்குரவு என்னும் சொற்களில் அவ்வீற்றுநிலை வருவதைக் கண்டுகொள்க.

அறிதல் என்பது உணர்தல்.

எனவே, 'ஒப்புரவறிதல்' என்பது 'உலக மக்களின் சமநிலையை உணர்ந்து கொள்வது' என்று பொருள்படுவதாகும். இஃது உலகத்தில் சமநிலைக் குமுகாயம் அமைய உணர்த்தும் ஒரு சமநிலைக் கோட்பாட்டின் (Socialism) அடிப்படை அறவுணர்வாகும் என்பது தெளிக.

இதனை 'ஒப்புரவு என்பது உலகநடை' என்று பழைய உரையாசிரியர் தருமரும்,

‘உலக நடையை அறிந்து, அதற்கேற்பப் பிறர்க்கு உதவி செய்தல்' 'உலக இயற்கையொடு ஒப்புரவாகிய நன்மை செய்வதற்கு' என்று உரையாசிரியர் பதுமனாரும்,