பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/11

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

9

உறழ்வையும், அவற்றால் விளையும் பயன்களையும் விளக்குவதே திருக்குறள். அவற்றை மேலும் நன்கு புலப்படுமாறு விளங்கச் செய்வனவே உரைகள்! அவற்றின் துல்லியத்தைக் காண்பதே இம் மெய்ப்பொருள் உரை!

இனி, திருக்குறளில் இவ்வளவுதாம் சொல்லலாம் என்பதில்லை; இன்னமும் சொல்லலாம்; எவ்வளவும் சொல்லலாம். உலக உயிர்களில் சிறந்து நிற்கும் மாந்தனின் உறவுகளையும், துய்ப்புகளையும், இன்ப துன்பங்களையும், எழுச்சி ஒடுக்கங்களையும் ஒருவாறு அடையாளம் காட்டி விளக்கிக் கூறுகிறது, திருக்குறள். அவற்றை இஃது இன்னின்னது என்று சுட்டிக் காட்டுகிறது இவ்வுரை.

இதில் சாதியில்லை; இனமில்லை. மாந்த இனத்தை வேறு பிரிக்கும் எந்த வேற்றுமைக் கூறும் இதில் இல்லை, என்க.

காற்று, உலகெங்கும் வீசிக்கொண்டிருந்தாலும் ஒர் இடத்திலும் உறைந்து நின்று விடாதது போல், மாந்த இனம் பல்வேறு இயக்கங்கட்கு ஆட்பட்டிருந்தாலும், ஒன்றினும் உறைந்துவிடக்கூடாது என்பதே திருக்குறள் கூறும் மாந்த மெய்ம்மம்.

மாந்தன் இயங்குவதுதான் இல்லறம், அரசியல், பொருளியல், வாழ்வியல் !

அவன் நின்று நிலைத்துவிடுவது தான் துறவறம், பேரா இயற்கை!

இந்நிலைகளையெல்லாம் முற்ற முடிந்த நிலையில் அடையாளம் காட்டிப் பேசுவதுதான் இம் மெய்ப்பொருள் உரை!”

இயல்பாகவே ஐயா அவர்களின் மெய்ப்பொருள் நோக்குக்குத் திருக்குறள் மிகவும் பொருந்தி வந்ததை உணர்ந்தார்கள். தாம் உணர்ந்த மெய்ப்பொருள் உணர்வை வெளிப்படுத்தத் திருக்குறளை ஒரு களமாக எடுத்துக்கொண்டாதாகவும் கூறினார்கள்.

நெருக்கடிக்காலச் சிறையினின்று வெளிப்பட்டபின், தாம் எழுதிய உரைக்குறிப்புகளைப் படியெடுக்கவும் பிரிக்கவும் துணையாளர்கள் தேவைப்பட்டனர். அப்போது அப்பணிச்சுமை பற்றி அனைவரிடமும்