பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

115


வேண்டாதவை.

- கடப்பாடு : கடமை அறங்களும்

- கடமைப்பாடு - கடப்பாடு.

- அருமைப்பாடு - அரும்பாடு.

பெருமைப்பாடு - பெரும்பாடு.

- போல என்க.

‘முழங்குகடல் முகந்த கமஞ்சூல் மாமழை’ - நற்: 347:1

‘யாண்டு பிழைப்புஅறியாது பயமழை சுரந்து
நோயில் மாந்தர்க்கு ஊழி ஆக’ -பதிற்: 21:30-31

‘மன்னுயிர் புரைஇய வலனேர்பு இரங்கும்
கொண்டல் தண்தளிக் கமஞ்சூல் மாமழை’ -பதிற்: 24:27-28

'நரவினை வரைந்தார்க்கும் வரையார்க்கும் அவைஎடுத்து
அறவினை இன்புறுஉம் அந்தணர் இருவரும்
திறம்வேறு செய்தியின் நூல்நெறி பிழையாது
குழவியைப் பார்த்துறூஉம் தாய்போல் உலகத்து
மழைகரந்து அளித்து ஒம்பும்’ - கலி: 99 :1-5.

'கடல்முகந்து கொண்ட கமஞ்சூல் மாமழை' - கலி: 43:1

‘உலகுதொழில் உலந்து நாஞ்சில் துஞ்சி
மழைகால் நீங்கிய மாகவிசும்பு' - அகம்: 141: 6-7

'நீண்டு.ஒலி அழுவம் குறைபட முகந்துகொண்டு
ஈண்டுசெலல் கொண்மு வேண்டுவயிற் குழீஇப்
பெருமலை யன்ன தோன்றல சூல்முதிர்
புருமுரறு கருவியொடு பெயல்கடன் இறுத்து
வளமழை மாறிய வென்றுாழ்’ - புறம்: 161:1-5

'ஆள்வினை மாரியின்' - அகம்: 279: 8

'உறுபஞ்சம் மூலம்தீர் மாரிபோல்' - சிறுபஞ்ச. சிறப்பு: 2-3

‘மழைவேண்டு புலத்து மாரி நிற்ப
நோயொடு பசிஇகந்து ஒரீஇ' - பதிற்றுப்: 13:26-27

- இனி மாரியின் பொதுமைத் தன்மை போலவே பொருள் மிகு செல்வரும் பொதுவறம் கருதி இல்லோர்க்கும் நல்லோர்க்கும் அளிசெய்து உதவுதலே சிறந்தது என்னும் கருத்து மிக்கிருந்த காலம்