பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/122

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

120

அ-2-18 ஒப்புரவறிதல் 22‘உண்டால் அம்மஇவ் வுலகம்
.....................................................
தமக்கென முயலா நோன்தாள்
பிறர்க்கென முயலுநர் உண்மை யானே’ -புறம்: 182:1,8-9

‘மண்டுஅமர் அட்ட மதனுடை நோன்தாள்
.................................................................................
நின்பெருஞ் செல்வம் யார்க்குஎஞ் சுவையே' - புறம்: 213:1,16

‘பாவடி யானை பரிசிலர்க்கு அருகாச்
சீர்கெழு நோன்தாள் அகுதை’ - புறம்: 233:2-3

‘ஈனமாய் இல்லிருந்து இன்றி விளியினும்
மானம் தலைவருவ செய்யவோ - யானை
வரிமுகம் புண்படுக்கும் வள்ளுகிர் நோன்தாள்
அரிமா மதுவை யவர்’ - நாலடி: 198

('முயற்சிவலி இல்லாதார் ஈனத்தொழிலுக்கு உடன்படுவர்' - உரையாசிரியர் தருமர்)

‘உறுநர்த் தாங்கிய மதனுடை நோன்தாள்’ - திருமுருகு:8:4

‘பெரிதணியர் ஆயினும் பிடிலார் செல்வம்
கருதும் கடப்பாட்ட தன்று’ - நாலடி. 261:3-4

‘பல்வகையும், தாளினால் தந்த விழுநிதியும்
......... காப்பு இகழல் ஆகாப் பொருள்’ - திரிகடு: 472,4

‘தம்தாள் நிழற்கீழ்க் கொள்பவே
கொல்லையில் கூழ்மரமே போன்று’ - பழமொழி:272:3-4

2) தக்கார்க்கு வேளாண்மை செய்தல் பொருட்டு : தகுந்தவர்களுக்கு அவற்றைக் கொடுத்து உதவுதல் பொருட்டேயாம் என்க.

தக்கார் : தகுந்தவர், தகுதியுடையவர். (114, 446, 731, 1051)

- வேளாண்மைக்குத் தக்கவர் என்பது பொருள்.

- உடல் உறுப்பு அற்ற பிறவியர், ஏழையர் அறிவர், பொதுநலம் கருதுபவர், கல்வியர், ஏதிலியர், துணையில் பெண்டிர் களைகண் அற்ற சிறுவர் முதலியோர், என்க.

'தக்கார்க்கே ஈவார்; தகார்க்களிப்பார் இல்லென்று
மிக்கார்க் குதவார் விழுமியோர் - எக்காலும்