பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

122

அ-218 ஒப்புரவறிதல் 22



- அவ்வாறு, பொதுமையறம் பேணி வந்த ஒருவன், அது, தன் நலிவினால் இயையாத பொழுது, சாவதே அதனினும் நன்மை தரும் என்பார்.

‘சாதலின் இன்னாத தில்லை; இனிததூஉம்
ஈதல் இயையாக் கடை’ - (230)

என்னும் அவர் கூற்றை உய்த்து உணர்க. இதன் பொருள் விரிவை வரலாற்றுவமையுடன் ஆண்டுக் காண்க.

- இதில் வந்த தக்கார்க்கு என்னும் சொல்லை வேளாண்மை செய்பவர்க்கு ஏற்றியுரைப்பார், பரிமேலழகர். அது பொருந்தாது. வேளாண்மை செய்யப் பெறுபவர்க்கே அது பொருந்தும் என்க, என்னை?

‘இத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன்’ - (87)

- என்று 'விருந்தோம்பல்' அதிகாரத்தும்

‘உதவி வரைத்தன்று உதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து' - (105)

- என்று 'செய்ந்நன்றி' அதிகாரத்தும் ஆசிரியர் கூறும் கருத்துகள், உதவி பெறுவாரை நோக்கியே கூறப்பெற்றுள்ளதும்,

'ஆற்றின் அளவறிந்து ஈக அதுபொருள்
போற்றி வழங்கும் நெறி' - (477)

- என்று 'வலியறிதல்' அதிகாரத்துள் 'ஆற்றின்' என்னும் சொல்லால் பெறுவார் தம் துறையும் தகுதியும் பெறுவார்க்கே கூறுவதும், உய்த்துணர்ந்து அதன் உண்மை காண்க,

3) இதில், கடப்பாடு செய்பவர்க்குள்ள முயற்சியும், செய்யப்படு பவர்க்குள்ள தகுதியும் கூறப்பெற்றன வாகலின், முன்னதன் பின்னர் இஃது அடைவு கொண்டது, என்க.


உக௩. புத்தேள் உலகத்தும் ஈண்டும் பெறலரிதே
ஒப்புரவின் நல்ல பிற. -213

பொருள்கோள் முறை:

ஒப்புரவின் நல்ல பிற
புத்தேள் உலகத்தும் ஈண்டும் பெறல் அரிதே.