பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

126

அ-2-18 ஒப்புரவறிதல் 22



'பிறர்க்(கு) ஈவுஇன்றித் தம்வயிறு அருத்தி
உரைசால் ஒங்குபுகழ் ஒரீஇய
முரைககெழு செல்வர் நகர்போ லாதே’ - புறம்: 127; 3. 1

'இவண்வந்த பெருநசையேம்
எமக்கீவோர் பிறர்க்கீவோர்
பிறர்க்கீவோர் தமக்கீவென
அனைத்துரைத்தனன் யானாக’ - புறம்: 136:19-22

- இனி, அவ்வகையில், வையாவிக் கோப்பெரும் பேகனைப் பரணர் பாடிய பாடல் ஒன்றிலும், அவ்வாரிய 'தர்ம'வியல் கருத்து மறுக்கப்பட்டுத் தமிழியல் கருத்தே வலியுறுத்தப் பெறுதல் காண்க.

‘படாஅம் மஞ்ஞைக் கீத்த எங்கோ
கடாஅ யானைக் கலிமான் பேகன்
எத்துணை யாயினும் ஈத்தல் நன்றென
மறுமை நோக்கின்றோ வன்றே
பிறர், வறுமை நோக்கின்று அவன்கை வண்மையே - புறம்.141:11-15

- இனி, ஆசிரியர் பிறரும் அவ்வகையிற் கூறியவை காண்க

‘ஏற்றகை (மாற்றாமை என்னானுந் தாம்வரையாது)
ஆற்றாதார்க்(கு) ஈவதாம் ஆண்கடன்’ . - நாலடி:98:1-2

'ஆற்றுதல் என்பதொன்று அலர்ந்தவர்க்கு உதவுதல்' - கலி:133:6

'ஆற்றுநர்க்கு அளிப்போர் அறவிலை பகர்வோர்;
ஆற்றா மாக்கள் அரும்பசி களைவோர்
மேற்றே உலகின் மெய்ந்நெறி வாழ்க்கை’ - மணி:11:92-94

‘வைப்பானே வள்ளல்; வழங்குவான் வாணிகன்' - சிறுபஞ்ச 34

'இம்மையாற் செய்ததை இம்மையே ஆம்போலும்
உம்மையே ஆம்என்பார் ஒரார்காண்' - திணைமாலை:123

‘சிறுநன்றி யின்றிவர்க்குயாம் செய்தக்கால் நாளைப்
பெறுநன்றி மன்னும் பெரிதென்று - உறுநன்றி
தானவாய்ச் செய்வது உம் தானம்அன் றென்பதுவே
வானவாம் உள்ளத் தவர்’ - யா.வி.4. மேற்.

‘ஏற்றார்கட்கு எல்லாம் இறைநிற்பத் தாமுடைய
மாற்றார் கொடுத்திருப்ப வள்ளண்மை’ பழமொழி : 318

'ஆற்றா மக்கட்கு ஆற்றுந் துணையாகி' - மணி: 17:54