பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

127



'நிலந்தினக் கிடந்த நிதியமொடு அனைத்தும்' - மணி: 19:35

'இலம்படு புலவர் ஏற்றகைந் நிறைய
.........................................................ஈகை நல்கி’ - மலைபடு: 575:80

‘வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம் .
குறியெதிர்ப்பை நீரது உடைத்து . - 221

‘இறப்பச் சிறிதென்னாது இல்லென்னாது என்றும்
அறப்பயன் யார்மட்டும் செய்க’ - நாலடி:99:1-2

‘அடுக்கிய மூவுலகும் கேட்குமே சான்றோர்
கொடுத்தார் எனப்படும் சொல்’ - நாலடி:100:3-4

‘தக்கோர் குணம் கொடையால்’ - நல்வழி:16:1

‘கற்றா தரல்போல் கரவாது அளிப்பரேல்
உற்றார் உலகத் தவர்’ - நல்வழி:29:2-3

'ஆறிடும் மேடும் மடுவும்போல் ஆம்செல்வம்
மாறிடும் ஏறிடும் மாநிலத்தீர் - சோறுஇடும்
தண்ணீரும் வாரும் தருமமே சார்பாக
உண்ணிர்மை வீறும் உயர்ந்து - நல்வழி: 32

‘இரப்பவர் என்பெறினும் கொள்வர்; கொடுப்பவர்
தாமறிவர் நங்கொடையின் சீர்’ - ஒளவையார்

'முனிவினும் நல்குவர் மூதறிஞர் உள்ளக்
கனிவினும் நல்கார் கயவர் - தணிவிளையில்
காயினும் ஆகும் கதலிதான் எட்டிபழுத்(து)
ஆயினும் ஆமோ அற - நன்னெறி:28

4) இது, தக்கார்க்கு வேளாண்மை செய்யும் ஒப்புரவு உணர்வின் நன்மை கூறுவதாகலின், அடுத்து வைக்கப் பெற்றது.


உக௪. ஒத்த(து) அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும் - 214

பொருள்கோள் முறை: இயல்பு

பொழிப்புரை : (உலகமக்கள்) அனைவரது நலனுக்கும் ஒத்த பொதுமையறச் செயலை அறிந்து, அதன்படி நடப்பவனே உயிர்வாழ்கிறான் என்னும்