பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

129


வேண்டியது.

‘வசையொழிய வாழ்வாரே வாழ்வர்' - 24

‘உழுதுண்டு வாழ்வாரே வாழ்வர்’ - 1933

- இவ்விரண்டு கூற்றினும் இருவேறு மாந்த வாழ்க்கைக்குரிய இரண்டு சிறப்புக் கருத்துச் சொல்லப் பெறுகின்றன.

- அவை, 'மாந்தனாகப் பிறந்தவன் பிறர் இகழ்வதற்கு உரியவனாக, பிறர் வசை கூறுவதற்கு உரியவனாக இருத்தல் கூடாது. அவ்வாறு இருந்தால், அவன் வாழ்வதற்கு உரியவனல்லன், வாழ்க்கை உடையவனுமல்லன்'.

- ஏனெனில், பறவைகளும் விலங்குகளுங்கூடப் பிறர் இகழ்வதற்கு வசை கூறுவதற்கு உரிய நிலையில் வாழ்வதில்லை.

- ஆனால், மாந்தனாகப் பிறந்தவன் அவ்வாறிருந்தால், அவனும் வாழாதவனே. எனவே பிறர் இகழத் தக்க வகையில், பிறர் இவனை வசை கூறுவதற்குரிய முறையில் வாழாதவனே 'வாழ்பவன்' என்று சொல்லப் பெறுவான் என்பது முதல் கருத்து.

- இனி, இரண்டாவதாக, 'உழுது உண்டு வாழ்பவரே வாழ்பவர்' என்பதும் மாந்தர்க்கே உரிய சிறப்புநிலையைச் சுட்டிக் கூறுகின்ற கருத்தாம்.

- ஏனெனில், பறவைகளும், விலங்குகளும் நிலத்தை உழுது, பயிர் செய்து அவற்றை உண்டு வாழ்வதில்லை. அப்படியே கிடைப்பதைத்தான் உண்டு உயிர்த்திருக்கின்றன.

- மாந்தருள்ளும், அவ்வாறு கிடைப்பவற்றை வாங்கி உண்பவரே பெரும்பாலார்.

- ஆனால், அவ்வாறு செய்யாமல் தாமே நிலத்தை உழுது, வேளாண்மை செய்து உண்டு வாழ்பவர் மக்களுள் சிறுபான்மையர் ஆவார்.

- இவர் சிறப்பும் பெருமையும் கருதியே 'உழுது உண்டு வாழ்வாரே வாழ்வார்' என்று அவர்க்கு மக்கட் பெருமை சாற்றிக் கூறுவார், என்க.

- இனி, அவர்களே போலும், உலக மக்களில் பெரும்பாலாரும் பிறரைப் பற்றிக் - குறிப்பாக ஏழை எளியவர்கள், நலிந்தவர்கள் பற்றிக் - கவலைப் படாமல் வாழ்ந்திருக்க, அவருள் சிறுபான்மையர், அதுவும் மிகச்சிலர், தம் இயல்புக்கு மீறிய மேம்பட்ட மனப்பண்பு உடையவர்களாய்ப், பொதுமையற உணர்வுடன், அவர்களைப் பற்றி அறிதலும், அவர்கட்குத் தம்மாலான உதவிகளை, மாந்தச் சமநிலை நோக்கிச் செய்வதும் உடையவர்களாக உள்ளார்கள்.