பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

132

அ-218 ஒப்புரவறிதல் 22



‘குடிசெய்து வாழ்வானைச் சுற்றமாகச் சுற்றும் உலகு' - 1025

'நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்
பண்புபா ராட்டும் உலகு” - 994

திரு. செல்வம் பொதுநலத்துக்குப் பயன்படுவதால் - நல்வினைவைத் தருதலால் - 'திரு’ என்று செல்வத்தைக் குறித்தார்.

'கைம்மாறு உகவாமல் கற்றறிந்தோர் மெய்வருந்தி
தம்மால் இயல்உதவி தாம்செய்வார்’ - நன்னெறி:29:1-2

'பேரறிஞர் தாக்கும் பிறர்துயரம் தாங்கியே
வீரமொடு காக்க விரைகுவார் - நேரிழையாம்
மெய்சென்று தாக்கும் வியன்கோல் அடிதன்மேல்
கைசென்று காக்கும் கடிது’ - நன்னெறி: 31

‘தத்தம் நிலைக்கும் குடிமைக்கும் தப்பாமே
ஒத்த கடப்பாட்டில் தான் ஊன்றி - எய்த்தும்
அறங்கடையில் செல்லார்; பிறன்பொருளும் வெஃகார்
புறங்கடையது ஆகும் பொருள்.’ - நீதிநெறி: 64

‘தன் அளியால் மன்பதை ஒம்பாதாற்கு என்ஆம்’ - நீதிநெறி:27:3

‘பயம்கெழு திரு’ - நீதிநெறி:298:1

2) ஊருணி நீர்நிறைந்தற்றே : ஊர்மக்கள் பயன்படுத்துகின்ற தண்ணீர்க்குளம் நீர் நிறைந்திருத்தல் போல்வதாம், என்க.

ஊருணி : ஊர்மக்கள் நீர்உண்ணப் பயன்படுத்துகின்ற தண்ணீர்க்குளம்.

‘ஊருண்கேணி - புறம் 392:13

‘உண்துறை . . . குண்டுநீர்’ - நற்:310:3

‘வரைஇழி அருவி உண்துறைத்தரூஉம் குன்று’ - குறுந் 905

‘ஊருண்கேணி உண்துறை’ - குறுந் 3991

‘உண்துறை உடைந்த பூப்புனல்’ - கலி: 78:3

'அகல்இலை நாவல் உண்துறை உதிர்த்த’ - அகம் 380:4

‘உண்துறை மலையலர் அணியும் தலைநீர்’ - புறம்: 390:24

‘ஊருணி' என்னும் சொல் கழகஇலக்கியங்களுள், இந்நூலுள் மட்டும் ஒரே இடத்தில் பயன்படுத்தப் பெற்றுள்ளது என்பதை அறிதல் வேண்டும்.

‘ஊருணி' என்னும் சொல்லைப் பாவாணர் பாண்டிநாட்டு வழக்கென்றதால், நூலாசிரியர் பாண்டி நாட்டின் கண் வாழ்ந்திருத்தல்