பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/139

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

137


பெருந்தகையாளனைப் பசிப் பிணி மருத்துவன் என்றும்; ‘பசிப்பகைவன்’ என்றும் கூறிப் புகழ்கின்றமையைத் தமிழ் இலக்கியங்களில் காணலாகும்.

‘பசியென்னும் தீப்பிணி’ - 227

'அறிவு அழுங்கத் தின்னும் பசிநோய்’ - திரிகடு: 95:1

‘பசிப்பிணி என்னும் பாவியது தீர்த்தோர்' - மணி. 11:80

‘பசிப்பிணிக்கு இறைஞ்சிய’ - குறுந்:213:3

‘பசிப்பிணி மருந்து’ - மணி. 28 : 217

‘பசிப்பகைப் பரிசில் காட்டினை கொளற்கே' - புறம்: 182:10

‘பசிப்பிணி மருத்துவன் இல்லம்
அணித்தோ சேய்த்தோ கூறுமின் எமக்கே’ - புறம்: 173:11-12

‘ஈர்ந்தை யோனே பாண்பசிப் பகைஞன்
இன்மை தீர வேண்டின் எம்மொடு
நீயும் வம்மோ முதுவாய் இரவல! - புறம்: 180:7-9

‘பைதல் சுற்றத்துப் பசிப்பகை யாகிக்
கோழி யோனே கோப்பெருஞ் சோழன்’ - புறம்:212: 12-13

‘தன்பகை கடிதல் அன்றியும் சேர்ந்தோர்
பசிப்பகை கடிதலும் வல்லன் மாதோ’ - புறம்: 400:16-17

‘மருந்தாகும் தீம்நீர் மலிதுறை போல
இருந்தையூர் அமர்ந்த செல்வ’ - பரி.திரட்டு:1 :4-5

‘மருந்தும் உடையையோ மற்றே இரப்போக்கு
இழையணி நெடுந்தேர் களிறொடு என்றும்
மழைகரந் தன்ன ஈகை வண்மகிழ்
கழல்தொடித் தடக்கை கலிமான் நள்ளி’ - அகம்: 23.8:11-14

‘திருமருந்து விளைக்கும் நன்னாட்டுப் பொருநன்
கிள்ளி வளவன்’ - புறம் : 70:9-10

(இங்கு உணவு பசிக்கு மருந்து எனப்பட்டது)

'அல்லல் ஒருவர்க்கு அடைந்தக்கால் மற்றவர்க்கு
நல்ல கிளைகள் எனப்படுவார் - நல்ல
வினைமரபின் மற்றதனை நீக்கும் அதுவே
மனைமரம் ஆய மருந்து' - பழமொழி : 53

ஆல் - அசை .