பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/14

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

வெளியீட்டுரை

துறவறவியலுக்கு எழுதிய அதிகார முன்னுரையையும், அடுத்து அவர் தொகுத்திருந்த அனைத்துக் குறள்களுக்குமான அரிய குறிப்புரைகளையும் தொடர்ந்து வெளியிடவுள்ளோம்.

ஐயா அவர்கள் இவ் வடிவங்களைப் பார்க்காமல் சென்றிருந்தாலும் அவர்கள் குறித்திருந்தபடியே பதிப்புரையைத் திருக்குறள்மணி புலவர் இறைக்குருவனார் அவர்களும் வெளியீட்டுரையை நானும், தகவுரையைச் சொல்லாய்வு அறிஞர் ப. அருளியார் அவர்களும் எழுத அவை இணைக்கப்பட்டுள்ளன. திரு. அருளியார் எழுதிய தகவுரையை ஐயா அவர்களே பார்க்க நேர்ந்தது.

இம் மூன்றாம் நான்காம் பகுதிகள் கையெழுத்துப் படியிலிருந்து தமிழ்நிலத்தில் கணினியச்சுக்குக் கொணர்ந்த திருவாட்டி அ.மு. செந்தாமரை செம்பரிதி, திருவாட்டி செல்லின் சீவராசு ஆகியோர்க்கும், இதைத்தம் வினையழுத்தங்களுக்கிடையில் அக்கறையோடு முன்பாதியை மெய்ப்புப் பார்த்தளித்த எம் அன்புறவான ஐயா புலவர். கி.த.பச்சையப்பனார் அவர்களுக்கும். உடல் நலக்குறைவாக இருந்தும் அதைப் பொருட்படுத்தாமல் தென்மொழி இல்லத்திலேயே வந்திருந்து மெய்ப்புப்பார்த்த எம் அன்பு தமையனார் புலவர் கு. அண்டிரன் ஐயா அவர்களுக்கும், தென்மொழி பதிப்பகம் வெளியிடும் நூல்களின் அனைத்துப் பணிகளையும் மேற்பார்வையிட்டு யியக்கிவரும் திருக்குறள்மணி புலவர் இறைக்குருவனார் அவர்களுக்கும், தென்மொழியின் சுமை நேர்ந்தபோதெல்லாம் ஐயாவின் காலத்திலிருந்தே தோள் கொடுத்துவரும் குடும்பவுறுப்பினரான தென்மொழி ஈகவரசன் அவர்களுக்கும், அனைத்து நூல்களுக்கும் முகப்பு அட்டைவடிவங்களை உருவாக்கிய எம் மூத்த மகன் செல்வன் மா.பூ. தமிழ்மொய்ம்பனுக்கும் மற்றும் இந்த நூல்கள் உருவாகத் துணைநின்ற அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் எம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.