பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/141

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

139உவமேய முதல்வன்
(கருத்தா) (குறளெண்)
உவமானப் பொருள் உவமான விளக்கம் உவமானச் சிறப்பு (இறைச்சி)ப் பொருள்
பெருந்தகையான் செல்வம் (217)

நற்குணங்கள் உடையவன். பெருந்தன்மை உடையவன், மேனிலை உணர்வு உள்ளவன். (மனத்தால் சிறந்தவன்)

மருந்து மரத்தின் பயன்.
  • மருந்து போல் முழுவதும் பயன்தரும் மரம்,
  • வேம்பு, ஆல், அத்தி, வில்வம், அரசு முதலியன.
  • மருந்து மரத்தின் விதை வேர், பட்டை, பூ, காய், கனி, நிழல், காற்று முதலிய அனைத்தும் மருந்து ஆவது போல், பெருந்தகையாளர் தம் பொருளால் மட்டுமன்றி, சொல்லால், செயலால் பசிப்பிணிக்கும், வறுமை நோய்க்கும், உடல்நோய்க்கும், என்றும், எப்பொழுதும் உதவுதல்.
  • எடுத்துக்கொண்டு சென்று, காத்துவைத்து எவர்க்கும் எக்காலத்தும் எவ்விடத்தும் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் உதவுவது.
  • பெற்றார்க்கு மட்டுமின்றிப் அவர்வழிப் பிறர்க்கும் பயன்படும்படி உதவுவது.


3) இம் மூன்று செய்யுள்களிலும் வந்த 'ஊருணி', 'பழுமரம்', 'மருந்துமரம்' என்னும் மூன்று உவமைகளைப் பற்றியும், பாவாணர் அவர் மரபுரையில் கீழ்வரும் நய விளக்கம் ஒன்றைக் கூறுவர். அக் கருத்தும் இங்கு கவனிக்கத் தக்கது. அது,