உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

142

அ-2-18 ஒப்புரவறிதல் 22


உள்ளமெனும் நாரினால் கட்டி, உளவரையால்
செய்வர் செயற்பா லவை’ - நாலடி. 153

‘உறைப்பருங் காலத்தும் ஊற்றுநீர்க் கேணி
இறைத்துணினும் ஊராற்றும் என்பர்; கொடைக்கடனும்
சாஅயக் கண்ணும் பெரியார்போல்; மற்றையார்
ஆஅயக் கண்ணும் அரிது' - நாலடி: 184

'உறுபுனல் தந்துலகு ஊட்டி அறுமிடத்தும்
கல்லுற் றுழியூறும் ஆறேபோல், செல்வம்
பலர்க்காற்றிக் கெட்டுலந்தக் கண்ணும் சிலர்க்காற்றிச்
செய்வர் செயற்பா லவை’ - நாலடி : 185

'ஆற்றுப் பெருக்கற்று அடிசுடும்.அந் நாளுமல்வா(று)
ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும் - ஏற்றவர்க்கு
நல்ல குடிப்பிறந்தார் நல்கூர்ந்தார். ஆனாலும்
இல்லையென மாட்டார் இசைந்து’ - நல்வழி: 9

‘. . . தம்வீறு அழிதல்கண்டார் கொடுப்பதன்கண்
ஆற்றமுடி யாதெனினும் தாம் ஆற்றுவார்’ - அறநெறி:742-3

‘கூஉய்க் கொடுப்பதொன்று இல்லெனினும் சார்ந்தார்க்குத்
தூஉய்ப் பயின்றாரோ துன்பம் துடைக்கிற்பார்
வாய்ப்பத்தான் வாடியக் கண்ணும் பெருங்குதிரை
யாப்புள்வே றாகி விடும்’ - பழமொழி:162

'அடந்து வறியராய் ஆற்றாத போழ்தும்
இடங்கண்(டு) அறிவாமென் றெண்ணி யிராஅர்
மடங்கொண்ட சாயல் மயிலன்னாய்! சான்றோர்
கடன்கொண்டும் செய்வார் கடன்’ -பழமொழி : 216

'நாடறியப் பட்ட பெருஞ்செல்வர் நல்கூர்ந்து
வாடிய காலத்தும் வட்குபவோ ?” - பழமொழி:278:1-2

நூலாசிரியரும், சிறந்த ஒரு செயல் எந்நிலையிலும் செய்யப்படுதல் வேண்டும் என்னும் கருத்தை நூலுள் பல்வேறு இடங்களில் வலியுறுத்துவார்.

'ஆக்கம் இழந்தேம் என்று அல்லாவார் ஊக்கம்
ஒருவந்தம் கைத்துடை யார்’ - 593